spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரசிகர்களின் பேராதரவை பெற்ற 'ஹாட் ஸ்பாட்'..... ஓடிடி ரிலீஸ் எப்போது?

ரசிகர்களின் பேராதரவை பெற்ற ‘ஹாட் ஸ்பாட்’….. ஓடிடி ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

ஹாட் ஸ்பாட் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 29ஆம் தேதி வெளியான திரைப்படம் ஹாட் ஸ்பாட். ரசிகர்களின் பேராதரவை பெற்ற 'ஹாட் ஸ்பாட்'..... ஓடிடி ரிலீஸ் எப்போது?இந்த படத்தை ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான அடியே திரைப்படத்தின் மூலம் பிரபலமான விக்னேஷ் கார்த்திக் இயக்கி இருந்தார். இதில் கலையரசன், கௌரி கிஷன், ஜனனி ஐயர், அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், சேண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதனை கேஜேபி டாக்கிஸ் மற்றும் 7 வாரியர் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. படத்திற்கு சதீஷ் ரகுநாதன், வான் ஆகியோர் இசையமைத்திருந்தனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றது. அந்த வகையில் இந்த படம் ஆண் பெண் உறவை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்றது. ரசிகர்களின் பேராதரவை பெற்ற 'ஹாட் ஸ்பாட்'..... ஓடிடி ரிலீஸ் எப்போது?இந்நிலையில் இந்த படம் விரைவில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் வருகின்ற மே 3ஆம் தேதி முதல் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ