50 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு!

 

சென்னை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா- மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார் குடியரசுத் தலைவர்!
Photo: President Of India

முன்னாள் குடியரசுத் தலைவரும், ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 05- ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி கூட்டணியின் ‘ஜவான்’…… இசை வெளியீட்டு விழா அப்டேட்!

இந்தாண்டின் நல்லாசிரியர் விருதுக்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட 50 ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகியோருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்தியை கொன்றவர்கள் எப்படி ‘ஜெய்பீம்’ படத்திற்கு விருது தருவார்கள்?….. கேள்வி எழுப்பிய பிரகாஷ்ராஜ்!

வரும் செப்டம்பர் 5- ஆம் தேதி டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நல்லாசிரியர் விருதுகளை வழங்குகிறார்.

Advertisement