spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஐதராபாத்தில் பிரபல ஓட்டலில் பிரிட்ஜ் வெடித்து விபத்து... பெண் உள்பட இருவர் காயம்

ஐதராபாத்தில் பிரபல ஓட்டலில் பிரிட்ஜ் வெடித்து விபத்து… பெண் உள்பட இருவர் காயம்

-

- Advertisement -

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஓட்டலில் பிரிட்ஜ் வெடித்து, விபத்திற்குள்ளானதில் தாய் மற்றும் குழந்தை காயம் அடைந்தனர்.

we-r-hiring

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் தெலங்கானா ஸ்பைசி கிச்சன் எனும் ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சமையல் கூடத்தில் உள்ள பிரிட்ஜ் திடீரென வெடித்து சிதறியது. இதனால், சமையல் அறையில் தீப்பற்றிய நிலையில், ஒட்டல் சுவர் இடிந்து, அருகில் உள்ள துர்கா பவானி நகர் பகுதியில் குடியிருப்புகள் மீது கற்கள் விழுந்தன. இதனால் குடியிருப்புகளில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.

இந்த விபத்தில் பூஜா என்ற இளம் பெண்ணும், அவரது மகனும் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ஜூப்லி ஹில்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து தெலுங்கானா ஸ்பைசி கிச்சன் உணவக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ