குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட சிவாங்கி தற்போது இந்த சீசனில் குக்(Cook) ஆக களம் இறங்கியுள்ளார். அவர் எப்படி சமைக்க போகிறார் என்று சமூகவலைதளங்களில் பல கலந்துரையாடல்கள் நடந்து வரும் சிவாங்கி நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.
“இந்த சீசன் தொடங்கிய முதல் நான் எப்படி சமைக்க போகிறேன் என்று பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பிற்கு முன்னர் நான் ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி நேரங்கள் பயிற்சி செய்கிறேன். நான் மட்டுமல்ல அனைத்து குக்-களும் தான். நாங்கள் எங்களின் சிறந்த உழைப்பை கொடுக்க ஒவ்வொருவரும் நாளின் பல மணி நேரத்தை இதற்காக செலவிட வேண்டி உள்ளது.
கோமாளிகளும் படப்பிடிப்பிற்காக அதிக நேரம் பயிற்சி செய்கின்றனர். நாங்கள் உங்களை மகிழ்ச்சிபடுத்துவதற்காக மிகவும் கடினமாக உழைத்து எங்களின் சிறப்பானவற்றைக் கொடுத்து வருகிறோம். உங்களை மகிழ்விப்பதற்கு அப்பால் அனைத்து டென்ஷனும் எங்களுடையது. எனவே நிகழ்ச்சி எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ரசியுங்கள். ஒருவரின் கடின உழைப்பை உதாசீனப்படுத்துவது மிகவும் எளிதான ஒன்று.
எனது கடின உழைப்பால் நான் சமைத்த உணவு நன்றாக வந்தால் அது கடவுளின் ஆசி. நான் கடினமாக உழைத்தும் நான் செய்த சமையல் சரியாக வரவில்லை என்றாலும் அது நான் பெரிதாக பொருட்படுத்தமாட்டேன். மிகவும் சிம்பிளான லாஜிக் தான். நான் இங்கு உலகைப் பற்றி தெரிந்துகொள்ளவும் அதை ரசிக்கவும் தான் வந்துள்ளேன். நீங்களும் நிகழ்ச்சியை பார்த்து ரசிக்கவும் நண்பர்களே” என்று தெரிவித்துள்ளார்.
சிவாங்கி எதற்காக இந்த பதிவை வெளியிட்டுள்ளார் என்றும் பலர் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.