spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்800க்கும் அதிகமான ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்

800க்கும் அதிகமான ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்

-

- Advertisement -
800க்கும் அதிகமான ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்
தென்னாபிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரத்தில் ஈஸ்டர் தினத்தை ஒட்டி 800க்கும் அதிகமான ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் பிரம்மாண்ட திருமணம் விழா நடைபெற்றது.

800க்கும் அதிகமான ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்

ஜோஹன்னஸ்பர்க் நகரத்திலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புகழ் பெற்ற சர்வதேச பெந்தெகொஸ்தே புனித தேவாலயம்.

we-r-hiring

இந்த தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை பிரம்மாண்ட திருமண விழாக்கள் நடைபெறுவது வழக்கம். கொரோனா பெரும் தொற்று காரணமாக மூன்று ஆண்டுகளாக இந்த விழாக்கள் நடைபெறவில்லை.

800க்கும் அதிகமான ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்

இந்த நிலையில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் தினத்தில் பிரம்மாண்ட திருமண விழா நடைபெற்றது. இதில் 800க்கும் அதிகமான ஜோடிகள் வண்ணமயமான ஆடைகள் அணிந்து ஒரே நேரத்தில் மோதிரம் மாற்றி இல்வாழ்க்கையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் நடைபெற்ற இந்த விழாவில் புதுமணத் தம்பதிகள் நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

MUST READ