spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்ஆப்கன் விமான தளத்தை அமெரிக்கா கைப்பற்ற முயற்சி - இந்தியா எதிர்ப்பு

ஆப்கன் விமான தளத்தை அமெரிக்கா கைப்பற்ற முயற்சி – இந்தியா எதிர்ப்பு

-

- Advertisement -

Donald Trumph

ஆப்கானிஸ்தான் விமான தளத்தை அமெரிக்கா கைப்பற்ற முயன்று வரும் நிலையில், ஆப்கனில் வெளிநாட்டு ராணுவம் நிலை நிறுத்தப்படுவதற்கு இந்தியா உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

we-r-hiring

கடந்த 2021ம் ஆண்டு தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், பயங்கரவாத அமைப்பான தாலிபன் ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றியது. இருப்பினும் பல நாடுகள் தாலிப்ன் ஆட்சியை முறையாக அங்கீகரிக்கவில்லை. ஆனால் முதல் நாடாக ரஷ்யா கடந்த ஜுலை மாதம், தாலிபனின் ஆட்சி நிர்வாகத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தது. இந்தச் சூழலில் ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமானப் படை தளத்தை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறித்தி வருகிறார். அண்மையில் அவர் வெளியிட்ட இந்த அறிவிப்போடு, ஆப்கானிஸ்தானுக்கு கடும் நெருக்கடியையும் கொடுத்து வருகிறார்.

ஆப்கனின் பக்ராம் விமான தளத்தை கைப்பற்றக் கோரும் அமெரிக்காவின் முயற்சிக்கு இந்தியா உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதாவது இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெஸ்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளன. ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட 9 உறுப்பு நாடுகளைக் கொண்ட ‘மாஸ்கோ பார்மட் கன்சல்டேசன்ஸ் ஆன் ஆப்கானிஸ்தான்’ கூட்டமைப்பின் 7வது ஆலோசனைக் கூட்டம் அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் இந்த முயற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், பிராந்திய அமைதி மற்றும் நலன்களுக்கு உதவாது என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

MUST READ