- Advertisement -
ஜப்பானில் 6.7 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
டிசம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் 7.5-7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கங்களால் சுமார் 30 பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில், ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை 9.36 மணியளவில் 6.7 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் அடிக்கடி நிலநடுக்கங்களைச் சந்திக்கும் நாடு என்பதால், இந்தத் தொடர் நிலநடுக்கங்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அறிவகம் முதல் அறிவாலயம் வரை!



