Homeசெய்திகள்உலகம்மீண்டும் விமான விபத்து – எம்.பி உட்பட 15 பேர் உயிரிழப்பு!!

மீண்டும் விமான விபத்து – எம்.பி உட்பட 15 பேர் உயிரிழப்பு!!

-

- Advertisement -

கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் அந்நாட்டு எம்.பி உட்பட 15 பேர் உயிாிழந்தனா்.மீண்டும் விமான விபத்து –  எம்.பி உட்பட 15 பேர் உயிரிழப்பு!!தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பயங்கர விமான விபத்து நிகழ்ந்துள்ளது. அந்நாட்டின் குகுடாவில் இருந்து புறப்பட்ட விமானம் தரையிறங்கும் போது கட்டுபாட்டை இழந்து, வெனிசுலா எல்லைக்கு அருகே விழுந்து நொறுங்கியது. இந்த விமான விபத்தில் கொலம்பியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினா் டியோஜெனஸ் குயின்டெரோ் உட்பட 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த விமானம் அரசால் இயக்கப்படும் சதேனா நிறுவனத்திற்கு சொந்தமானது. விபத்து குறித்த தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினா் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனா். விமானம் புறப்பட்ட 12 நிமிடங்களில்  விமானத்தின் தகவல் தொடா்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

பின்னா் விமானம் தரையிறங்க முயற்சித்த போது விபத்தில் சிக்கியது என கொலம்பியாவின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து எம்.பி.க்கள் செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி

MUST READ