Homeசெய்திகள்உலகம்இந்தியாவுக்கு எதிராக 100 சதவீத வரி விதிப்பு மசோதா: அமெரிக்க பிரதிநிதிகள் அவை அதிரடி முன்னெடுப்பு!

இந்தியாவுக்கு எதிராக 100 சதவீத வரி விதிப்பு மசோதா: அமெரிக்க பிரதிநிதிகள் அவை அதிரடி முன்னெடுப்பு!

-

- Advertisement -

உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தும் விதமாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரை சுங்க வரி (Tariff) விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கும் புதிய மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ‘லின்சி ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டம் 2026’ (Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026) என அழைக்கப்படும் இந்த மசோதா, செப்டம்பர் 15 அன்று 214-211 என்ற வாக்கு வித்தியாசத்தில் procedural வாக்கெடுப்பில் முன்னேறியது.

we-r-hiring

மசோதாவின் பின்னணி மற்றும் முக்கிய அம்சங்கள்

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களை இறக்குமதி செய்து வாங்கும் நாடுகளைக் குறிவைத்து இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா கருதும் நாடுகள் மீது கூடுதல் அழுத்தம் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.

மசோதா நிறைவேற்றப்பட்டால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 100 சதவீதம் வரை சுங்க வரி விதிக்க அதிகாரம் பெறலாம். இந்த வரி தானாக அமலுக்கு வராது; அதிபருக்கு வழங்கப்படும் அதிகாரத்தின் அடிப்படையில் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

இந்த மசோதாவின் Senate பதிப்பு ஆகஸ்ட் 7 அன்று 86-11 என்ற வாக்கில் நிறைவேற்றப்பட்டது. அந்த பதிப்பில் இந்தியா அல்லது சீனா பெயரிட்டு குறிப்பிடப்படவில்லை; ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவின் மிகப்பெரிய இறக்குமதியாளர்களை அடிப்படையாகக் கொண்ட விதிமுறை இடம்பெற்றிருந்தது.

பின்னர் பிரதிநிதிகள் அவையில் பரிசீலிக்கப்பட்ட திருத்தங்களில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை 100 சதவீதம் வரை வரி விதிக்கத் தகுதியான நாடுகளாகக் குறிப்பிடும் முன்மொழிவும் இடம்பெற்றது. ஆனால் இந்த திருத்தம் அல்லது மசோதா இந்தியா மீது உடனடியாக 100 சதவீத வரியை விதிப்பதாக அர்த்தமல்ல.

அடுத்த கட்ட நடவடிக்கை

பிரதிநிதிகள் அவையில் procedural வாக்கெடுப்பைத் தாண்டியுள்ள இந்த மசோதா, இறுதி வாக்கெடுப்பை எதிர்நோக்கியுள்ளது. அவையில் நிறைவேற்றப்பட்டால், அடுத்த சட்டமன்ற நடைமுறைகளுக்குப் பிறகு அதிபரின் கையெழுத்துக்காக அனுப்பப்படும். அதன்பிறகே அது சட்டமாகும்.

சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்சி: வாங் யியுடன் முக்கிய பேச்சுவார்த்தை!

MUST READ