spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!

பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!

-

- Advertisement -

அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் வுட்பிரிட்ஜ் பகுதியில் பாலியல் குற்றவாளி ஒருவர் தனது கூட்டாளியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் நடந்திருந்தது. இந்நிலையில், டிஸ்னியின் புகழ்பெற்ற ‘தி லயன் கிங்’ நாடகத்தில் நடித்துப் பிரபலமான நடிகை இமானி ஸ்மித் (26), மிடில்செக்ஸ் கவுண்டி பகுதியில் வசித்து வந்தார்.

இவருக்கும் இவருடைய காதலருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த காதலன் வீட்டில் இருந்த இமானி ஸ்மித்தை சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து நேற்று வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளி மீது கொலைக் குற்றம் சுமத்தி அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரசு வால்வோ பேருந்து – கட்டண விவரங்கள் வெளியீடு

we-r-hiring

MUST READ