spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு வால்வோ பேருந்து - கட்டண விவரங்கள் வெளியீடு

அரசு வால்வோ பேருந்து – கட்டண விவரங்கள் வெளியீடு

-

- Advertisement -

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ், முதல் முறையாக 20 வழித்தடங்களில் இயக்கப்படவுள்ள வால்வோ குளிர்சாதன சொகுசு விரைவுப் பேருந்துகளின் கட்டண விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.அரசு வால்வோ பேருந்து - கட்டண விவரங்கள் வெளியீடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த 20 நவீன VOLVO குளிர்சாதன பேருந்துகளை தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு உயர்தர, பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் இப்பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இருக்கை வசதி கொண்ட இந்த வால்வோ சொகுசு பேருந்துகளுக்கான பயணக் கட்டணங்கள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளன:
சென்னையில் – மதுரை ரூ.790,
சென்னை – கோவை ரூ.880,
சென்னை – திருப்பூர்  ரூ.800,
சென்னை – சேலம்  ரூ.575,
சென்னை – நெல்லை ரூ.1,080,
சென்னை – திருச்செந்தூர் ரூ.1,115,
சென்னை –  நாகர்கோவில் ரூ.1,215,
சென்னை – திருச்சி ரூ. 565,
சென்னை – பெங்கள் ரூ.735, என கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்ககப்பட்டுள்ளது. மேலும், இந்த வால்வோ பேருந்துகள் முழுமையான குளிர்சாதன வசதி, சௌகரியமான இருக்கைகள், நவீன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற அமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய வால்வோ சேவையால் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்துச் சகோதரர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள் – முதல்வர்

we-r-hiring

MUST READ