இந்தியாவின் வர்த்தக உறவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை பிரதமர் மோடி ட்ரம்புக்கு வழங்கிவிட்டாரா? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.


இதுகுறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”இந்தியா – அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டறிக்கையில், இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்க 18% வரிவிதிக்கும் என்றும் அமெரிக்கப் பொருட்கள் குறிப்பாக உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கு வரி முற்றிலும் நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், சோளம், கோதுமை, சோயா, அரிசி பால், சில இறைச்சி உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது என சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
ஆனால், கூட்டறிக்கையில் “wide range of food and agricultural products” என்பதுதான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, குறிப்பிட்ட எந்தப் பொருட்களுக்கு வரி நீக்கம் அல்லது குறைப்பு என்பதற்கான தெளிவான பட்டியல் வெளியிடப்படவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
அதேநேரத்தில், ரஷ்ய எண்ணெய்யை வாங்க மாட்டோம் என ஒப்புக்கொண்டதால்தான் 25% வரியை நீக்குவதாகவும், மீண்டும் ரஷ்ய எண்ணெய் வாங்குவது தெரியவந்தால் மீண்டும் வரிவிதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் தனது உத்தரவில் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் வர்த்தக உறவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை ட்ரம்புக்கு வழங்கினாரா பிரதமர் மோடி? என கேள்வி ஏழுப்பியுள்ளாா். மேலும், இதை இந்தியாவுக்குச் சாதகமான ஒப்பந்தம் எனக் கொண்டாடுபவர்கள் வெட்கப்பட வேண்டும்” என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க உமியைக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை சாப்பிடப் போகிறது – அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை
