Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழ்நாடு ஆபத்தான நிலையை நோக்கிச் செல்கிறது": திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!

“தமிழ்நாடு ஆபத்தான நிலையை நோக்கிச் செல்கிறது”: திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!

-

- Advertisement -

"தமிழ்நாடு ஆபத்தான நிலையை நோக்கிச் செல்கிறது": திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், டெல்லி மாணவர் போராட்டம், மாநில உரிமைகள் மற்றும் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தாவேக்கா) நிர்வாக முறை குறித்து திமுக சட்டத்துறையின் மாநில இணைச் செயலாளரும், எழும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஐ. பரந்தாமன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

நீட் எதிர்ப்பு & டெல்லி மாணவர்கள் போராட்டம்
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகவும், அத்தேர்வில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராகவும் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்துப் பேசிய பரந்தாமன், “நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே திமுகவின் தொடர்ச்சியான நிலைப்பாடு. வடமாநிலக் கட்சிகளுக்கு நீட் பற்றிய புரிதல் இல்லாதிருந்த சூழலில், தற்போது அங்குள்ள இளைஞர்களும் நீட்டுக்கு எதிராகக் குரல் கொடுப்பது வரவேற்புக்குரியது” என்றார்.

we-r-hiring

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல், ஒன்றிய பாஜக அரசு அவர்கள் மீது தடியடி நடத்தியதையும், தனி ஒரு இளைஞரைச் சுற்றி வளைத்துத் தாக்கியதையும் வன்மையாகக் கண்டித்த அவர், இச்சம்பவத்திற்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாகக் குரல் கொடுத்து மாணவர்களுக்குப் ஆதரவாக நின்றதைச் சுட்டிக்காட்டினார்.

தாவெக மீது காரசார விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், “போராடும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டிக்காமல், அதை இரு தரப்பினருக்கு இடையேயான மோதல் எனச் சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்லத் தாவேக்கா முயல்கிறது. அக்கட்சி பாஜகவுக்குப் பயந்து அரசியல் செய்கிறது. மாற்று அரசியல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் வேலையைச் செய்து வருகிறது” எனக் குற்றம்சாட்டினார். மேலும், சீர்காழியில் தாவெக நிர்வாகி ஒருவர் முதியவரைத் தாக்கிய சம்பவம் போன்ற குற்றச் செயல்களில் அக்கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், அத்தகைய நபர்கள் மீது காவலத்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

“பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணியில்லை”
தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் மற்றும் பாஜகவுடனான இணக்கம் குறித்த வதந்திகளுக்குப் பதிலளித்த பரந்தாமன், “திமுக எந்தக் காலத்திலும் பாரதிய ஜனதா கட்சியுடன் கொள்கைக் கூட்டணியோ அல்லது அரசியல் கூட்டணியோ வைத்துக்கொள்ளாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். நீட் ஒழிப்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, இருமொழி கொள்கையைப் பாதுகாப்பது, மேகதாட்டுப் பிரச்சனை தீர்வு மற்றும் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் இருப்பது போன்ற கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு உடன்பட்டால் மட்டுமே ஆதரவு அளிப்பது பற்றி யோசிக்க முடியும் என்றார்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ போன்ற கொள்கைகளைக் கொண்ட பாஜகவுடன் திமுக ஒருபோதும் இணைய முடியாது என்றும், தேசிய அளவில் மாநில உரிமைகளுக்கும் நாட்டின் நலனுக்குமான மசோதாக்களுக்கு மட்டுமே திமுக ஆதரவளிக்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.

 அரசு நிர்வாகம் & காவல்துறை மீது சாடல்
தமிழகத்தின் தற்போதைய அரசு நிர்வாகம் குறித்துப் பேசிய அவர், “தற்போது வெளிப்படைத்தன்மையற்ற, போலி விளம்பரங்களை (Fake Narratives) மட்டுமே நம்பியிருக்கக்கூடிய ஒரு அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. அரசின் தவறுகளை அல்லது குறைகளை விமர்சிக்கும் சாமானிய மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மீது காவலத்துறை உடனடியாகக் கைது நடவடிக்கை எடுப்பது சகிப்புத்தன்மையற்ற போக்கைக் காட்டுகிறது” என்றார். மேலும், “அதிகாரிகளும் காவல்துறையினரும் ஆட்சியாளர்கள் சொல்வதையெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாகச் செய்யாமல், சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும். அடக்குமுறையைக் கையிலெடுத்தால் திமுக என்றுமே அஞ்சாது” என்றும் எச்சரித்தார்.

“திமுக – அதிமுக இணைய வேண்டும்”: பாஜகவின் வியூகத்தை உடைக்க அரசியல் விமர்சகர் பொன்ராஜ் அதிரடி யோசனை!

MUST READ