Homeசெய்திகள்தமிழ்நாடு"திமுக ஆட்சி மீண்டும் அமையாது" – நாஞ்சில் சம்பத் ஆவேசம்!

“திமுக ஆட்சி மீண்டும் அமையாது” – நாஞ்சில் சம்பத் ஆவேசம்!

-

- Advertisement -

​”தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் அமையாது” என்று நாஞ்சில் சம்பத் ஆவேசமாகக் கூறியுள்ளார்."திமுக ஆட்சி மீண்டும் அமையாது" – நாஞ்சில் சம்பத் ஆவேசம்!

“தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை விரும்பிய தமிழ்நாட்டு மக்கள் த.வெ.க-விற்கு பெரும் ஆதரவை அளித்துள்ளனர். கூட்டணி தோழமைக் கட்சிகளான இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவோடு நமது ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது” என்று குறிப்பிட்டார்.

we-r-hiring

இது குறித்து ​மேலும் அவர் பேசகையில், “ஆறு மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் கூறி வருகின்றனர். ஆனால், கூட்டணி கட்சிகள் யாரும் ஆதரவை திரும்பப் பெறாத நிலையில் ஆட்சி எவ்வாறு கவிழும்? இனி வரும் ஏழு தலைமுறைக்கும் திமுக ஆட்சிக்கு வர முடியாது,” எனத் காரசாரமாகத் தெரிவித்தார்."திமுக ஆட்சி மீண்டும் அமையாது" – நாஞ்சில் சம்பத் ஆவேசம்!

​மாற்றுக்கட்சிகள் மீது சரமாரி விமர்சனம்
​நாம் தமிழர் கட்சி

“தமிழ் தேசியம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வந்த நாம் தமிழர் கட்சி, த.வெ.க-வின் வீச்சால் தனது செல்வாக்கை இழந்து வருகிறது. வருகிற 2029 நாடாளுமன்றத் தேர்தலோடு அக்கட்சியின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிடும்,” என்றார்.

​தேமுதிக & மநீம
கேப்டன் விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிகவை பிரேமலதா திமுகவிடம் அடகு வைத்துவிட்டதாகவும், அரசியல் மாற்றம் பேச வந்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் தன் அடையாளத்தை இழந்து திமுக திண்ணையில் தஞ்சமடைந்துள்ளதாகவும் சாடினார்."திமுக ஆட்சி மீண்டும் அமையாது" – நாஞ்சில் சம்பத் ஆவேசம்!

​முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு
பொன்முடி மற்றும் எ.வ.வேலு ஆகியோரின் ஊழல்கள் மற்றும் அத்துமீறல்களைப் பட்டியலிட்டுப் பேசிய அவர், கரூரில் நடைபெற்ற அசம்பாவிதச் சம்பவங்களுக்கு திமுகவினரின் திட்டமிட்ட நடவடிக்கைகளே காரணம் என குற்றம்சாட்டினார். ​”தமிழகத்தின் மருந்தாகவும், விருந்தாகவும் திகழும் நமது தலைவர் விஜயின் தலைமையில் தமிழகத்தில் நேர்மையான அரசியல் தொடரும்” எனத் தெரிவித்தாா்.

“அவதூறு பேச்சுக்குக் கைது நடவடிக்கை அவசியமற்றது” – பரந்தாமன் சுட்டிக்காட்டு!

MUST READ