Homeசெய்திகள்தமிழ்நாடு"2029-ல் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; முதலமைச்சர் விஜய்யும் இதையே அறிவிப்பார்" – திருச்சியில் காங்கிரஸ்...

“2029-ல் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; முதலமைச்சர் விஜய்யும் இதையே அறிவிப்பார்” – திருச்சியில் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் அதிரடிப் பேட்டி!

-

- Advertisement -

“2029 மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதில் எந்தவொரு மாற்றமும் இல்லை. மாணிக்கம் தாகூர் எம்பி இதுகுறித்துக் கூறவில்லை என்றாலும், நான் பகிரங்கமாகவே அறிவிக்கிறேன்; தமிழக முதலமைச்சரும் த.வெ.க தலைவருமான விஜய்யும் கூட இதையேதான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழக அமைச்சர் விஸ்வநாதன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்."2029-ல் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; முதலமைச்சர் விஜய்யும் இதையே அறிவிப்பார்" – திருச்சியில் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் அதிரடிப் பேட்டி!

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக அமைச்சர் விஸ்வநாதன், கூட்டணி மற்றும் 2029 மக்களவைத் தேர்தல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசினார்.

we-r-hiring

ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்
அப்போது, 2029 பொதுத்தேர்தல் குறித்து எம்பி மாணிக்கம் தாகூரின் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “2029 தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது பற்றி மாணிக்கம் தாகூர் வெளிப்படையாகக் கூறத் தயங்கியிருக்கலாம். ஆனால், நான் அதை உறுதியாகவும் பகிரங்கமாகவும் கூறுகிறேன். 2029 தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர். நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கவும், நாட்டை வழிநடத்தவும் அவரே பொருத்தமான தலைவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை” என்றார்.

முதலமைச்சர் விஜய் குறித்துக் கருத்து
தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் குறித்துப் பேசிய அவர், “அரசியல் சூழல்களை உணர்ந்து, நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் 2029 பொதுத்தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதை முதலமைச்சர் விஜய்யும் முறைப்படி அறிவிப்பார்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். 2029 பிரதமர் வேட்பாளர் குறித்து நிலவிவரும் அரசியல் விவாதங்களுக்கு நடுவே, திருச்சியில் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் அளித்துள்ள இந்த அதிரடிப் பேட்டி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியானது தமிழக வெற்றிக் கழகம்: இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

MUST READ