Homeசெய்திகள்தமிழ்நாடுஅங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியானது தமிழக வெற்றிக் கழகம்: இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியானது தமிழக வெற்றிக் கழகம்: இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

தமிழக அரசியல் களத்தில் முக்கியத் திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியானது தமிழக வெற்றிக் கழகம்: இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

we-r-hiring

மாநிலக் கட்சி அந்தஸ்து
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகள் மற்றும் இடங்களைப் பெறும் கட்சிகளுக்கு மாநிலக் கட்சி அந்தஸ்து வழங்கப்படும். அந்த அடிப்படையில், தவெக முன்வைத்த சான்றுகள் மற்றும் தேர்தல் செயல்பாடுகளை ஆய்வு செய்த இந்திய தேர்தல் ஆணையம், தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது.

விசில் சின்னம் உறுதியானது

மாநிலக் கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ‘விசில்’ சின்னமும் அக்கட்சிக்கான நிரந்தரச் சின்னமாகத் தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 6-ல் இருந்து 7 ஆக உயர்ந்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியானது தமிழக வெற்றிக் கழகம்: இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

கட்சி தொடங்கி குறுகிய காலத்திலேயே இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சி என்ற அதிகாரப்பூர்வ அந்தஸ்தைப் பெற்றிருப்பது தவெக நிர்வாகிகளிடையேயும், தொண்டர்களிடையேயும் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தவெக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கித் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/chief-minister-joseph-vijay-travels-to-london-today-to-attract-industrial-investments-his-first-overseas-trip-on-a-passenger-flight/228632

MUST READ