Homeசெய்திகள்தமிழ்நாடுதாராபுரம் இடைத்தேர்தல்: 256-வது முறையாக 'தேர்தல் மன்னன்' பத்மராஜன் வேட்புமனு தாக்கல்!

தாராபுரம் இடைத்தேர்தல்: 256-வது முறையாக ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் வேட்புமனு தாக்கல்!

-

- Advertisement -

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ‘தேர்தல் மன்னன்’ என அழைக்கப்படும் சேலம் மேட்டூரைச் சேர்ந்த கே. பத்மராஜன் முதல் நபராக வந்து நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

we-r-hiring

யாரு இந்த ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன்?

  • நீண்டகாலப் பயணம்: கடந்த 1988-ம் ஆண்டு முதல் இடைவிடாமல் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், மக்களவை, மாநிலங்களவை மற்றும் குடியரசுத் தலைவர் தேர்தல் வரை அனைத்துக் களங்களிலும் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வருகிறார்.

  • லிம்கா சாதனை: உலகிலேயே அதிக தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர் என்ற விசித்திரமான சாதனைக்காக இவரது பெயர் ‘லிம்கா சாதனைகள் புத்தகத்தில்’ (Limca Book of Records) இடம்பெற்றுள்ளது.

  • முக்கிய தலைவர்களை எதிர்த்துப் போட்டி: முன்னாள் முதலமைச்சர்களான மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், எடப்பாடி க.பழனிசாமி மற்றும் தேசியத் தலைவர்களான அடல் பிகாரி வாஜ்பாய், நரேந்திர மோடி, பி.வி.நரசிம்ம ராவ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை எதிர்த்துப் போட்டியிட்டுள்ளார்.

சுவாரசிய புள்ளிவிவரங்கள்:

  • மொத்த செலவு: இதுவரை தேர்தல்களுக்காகத் தனது சொந்தப் பணத்தில் ரூ.1 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளார்.

  • அதிகபட்ச வாக்குகள்: 2011-ல் மேட்டூர் தொகுதியில் பெற்ற 6,700 வாக்குகளே இவர் தனது தேர்தல் வரலாற்றில் பெற்ற அதிகபட்ச வாக்குகளாகும்.

  • 5 மாநிலங்களில் போட்டி: 1996-ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் 5 மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் செய்து அசத்தியுள்ளார்.

2026-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மேட்டூர் தொகுதியில் 254-வது முறையாகப் போட்டியிட்ட இவர், தாராபுரம் இடைத்தேர்தல் மூலம் மீண்டும் தேர்தல் களத்தைச் சூடாக்கியுள்ளார்.

கள்ளச்சாராய சாவுகள்: கோகுல்தாஸ் ஆணைய அறிக்கை மீது தவெக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? – அன்புமணி கேள்வி!

MUST READ