Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுகவுக்கு டிடிவி தினகரன் சர்ப்ரைஸ் ஆதரவு.. விஜய் ‘ஹீரோ இல்லை.. மாபெரும் வில்லன்’.. வெளுத்து வாங்கிய...

அதிமுகவுக்கு டிடிவி தினகரன் சர்ப்ரைஸ் ஆதரவு.. விஜய் ‘ஹீரோ இல்லை.. மாபெரும் வில்லன்’.. வெளுத்து வாங்கிய டிடிவி தினகரன்!

-

- Advertisement -

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவுக்கு தங்களது முழு ஆதரவையும் வழங்குவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.ammk-ttv-dhinakaran-alleges-that-tvk-government-after-meet-governor (1)

அக்டோபர் 6-ல் இடைத்தேர்தல்
தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் முதற்கட்டமாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அக்டோபர் 9-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளன.

we-r-hiring

இதனிடையே, தோழமைக் கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் வகையில் பா.ஜ.க, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் தலைவர்களை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவுக்கு அமமுக ஆதரவு
இந்தச் சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக வேட்பாளர்களுக்குத் தங்களது ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். அவர் பேசுகையில், “நாங்கள் ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள், கட்சிக்கும் தொகுதி மக்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அங்கு மீண்டும் அதிமுக வெற்றி பெறுவதற்காக அமமுக உறுதியோடு களத்தில் நின்று போராடும். ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதற்காகவே இந்த ஆதரவு நிலைப்பாடு.”

நடிகர் விஜய்யை கடுமையாக சாடிய தினகரன்:
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய டிடிவி தினகரன், “தற்போதுள்ள அரசாங்கம் ஒரு முதிர்ச்சியற்ற அரசாங்கம். மாற்றத்தை விரும்பி தவறானவர்களை மக்கள் தேர்ந்தெடுத்துவிட்டதை இப்போது உணரத் தொடங்கிவிட்டனர். தமிழகத்திற்கு இருண்ட காலமாக விஜய்யின் அரசியல் அமைந்திருக்கிறது. விஜய் சினிமாவில் மட்டுமே ஹீரோ, நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு மாபெரும் வில்லன்!

திரையில் பார்த்த ஹீரோ நல்லவர் என்று எண்ணினோம்; ஆனால் அவர் சுயநலமிக்கவர், தீமையானவர். தனது சொந்த நலனுக்காக யாரையும் பலிகொடுக்கவும், தூக்கி எறியவும் தயங்கமாட்டார்.” அதிமுக கூட்டணிக்கு அமமுகவின் ஆதரவு கிடைத்திருப்பது தேர்தல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளை நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 5 நாட்கள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்!

MUST READ