Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் காவல் நிலையத்தில் புகாரளித்த மறுநாளே இளைஞர் கொடூரக் கொலை: உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னையில் காவல் நிலையத்தில் புகாரளித்த மறுநாளே இளைஞர் கொடூரக் கொலை: உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

-

- Advertisement -

சென்னை திருவொற்றியூரில் வட்டிப் பணத் தகராறு தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்த மறுநாளே 26 வயது இளைஞர் நள்ளிரவில் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் காவல் நிலையத்தில் புகாரளித்த மறுநாளே இளைஞர் கொடூரக் கொலை: உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

வட்டித் தகராறு முதல் படுகொலை வரை
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப் என்பவரின் தாயார் டில்லி ராணி, அதே பகுதியைச் சேர்ந்த நவநீதம் என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இதில் நவநீதம் கூடுதலாக வட்டிப் பணம் கேட்டதால் இரு தரப்பிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக நவநீதம் அளித்த புகாரின் பேரில், பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை, பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி விடுவித்தது.

we-r-hiring

இருப்பினும் தகராறு தொடர்ந்த நிலையில், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், காவல் ஆய்வாளர் தன்னை மிரட்டுவதாகவும் கூறி பிரதீப் நேற்று முன் தினம் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், புகார் அளித்த மறுநாளே பிரதீப்பை மர்ம நபர்கள் நள்ளிரவில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னையில் காவல் நிலையத்தில் புகாரளித்த மறுநாளே இளைஞர் கொடூரக் கொலை: உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் காரசாரக் கேள்வி
இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் CASE போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே வீடியோ வெளியிட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று காவல் ஆய்வாளர் சொன்னதாகக் கூறியுள்ள நிலையை வைத்துப் பார்க்கும்போது, காவல்துறையைத் தன்வசம் வைத்துள்ள முதலமைச்சரையே காவல்துறையினர் ‘டம்மி சிஎம்’ ஆக நினைக்கிறார்களா? காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.” மேலும், சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால் திசைதிருப்பும் முதலமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேள்வி எழுப்பிய அவர், திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், தலைநகரில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை! இன்று முதல் 5,400 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – பயணிகள் கவனத்திற்கு!

MUST READ