மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முன்னாள் எழும்பூர் எம்.எல்.ஏ மற்றும் திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர்
ஐ. பரந்தாமன், கட்சித் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அண்ணா அறிவாலயத்தில் நெகிழ்ச்சிச் சந்திப்பு: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வேட்பாளர் பரந்தாமன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்குப் பொன்னாடை போர்த்தி, மலர்க்கொத்து வழங்கி தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தலைவர் மு.க. ஸ்டாலின், வேட்பாளர் பரந்தாமனுக்குச் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மதுராந்தகம் தொகுதியில் மகத்தான வெற்றி பெறக் களப்பணிகளை முடுக்கிவிடுமாறு அறிவுறுத்தினார்.
முக்கிய நிர்வாகிகளுடன் சந்திப்பு: இச்சந்திப்பின் போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உடனிருந்தனர்.
வாழ்த்து பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர்
ஐ. பரந்தாமன்: என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த கழகத் தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தவெக அரசின் தவறான நிர்வாகத்தையும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்து, மதுராந்தகம் தொகுதியை மீண்டும் திமுகவின் கோட்டையாக மாற்றுவோம்” என உறுதிபடத் தெரிவித்தார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: முதற்கட்ட அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு!
