Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது: விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கடும் தாக்கு!

முதலமைச்சர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது: விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கடும் தாக்கு!

-

- Advertisement -

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்த உடல்மொழி (Body Language) அரசியல் கண்ணியத்திற்கு எதிரானது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
தொல். திருமாவளவன் கடுமையாகச் சாடியுள்ளார்.

கண்ணியமான அணுகுமுறை அல்ல:
சட்டப்பேரவையில் மிசா சட்டம் தொடர்பான விவாதத்தின் போது முதலமைச்சர் விஜய் செய்த சைகை குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் எம்.பி.:

we-r-hiring

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிசா காலத்தில் அனுபவித்த கொடுமைகளையும் அவரது தியாகத்தையும் கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் விஜய் காட்டிய உடல்மொழி எந்த வகையிலும் கண்ணியமான அணுகுமுறை அல்ல. இது முழுக்க முழுக்க மனித மாண்புகளுக்கு எதிரானது” என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் களத்தில் தொடரும் காரசார விவாதம்:
முதலமைச்சர் விஜய்யின் இந்த நடத்தைக்கு ஏற்கனவே திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவிட்டு வரும் சூழலில், செப்டம்பர் 12 அன்று திமுக சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விசிக தலைவர் திருமாவளவனின் இந்தத் திடீர் கண்டன அறிக்கை, ஆளும் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

“ஏன்டா ராஜினாமா பண்ணீங்கன்னு கேளுங்க!” – வாக்காளர்களுக்கு ஆர்.கே. ராதாகிருஷ்ணன் கொடுத்த சீக்ரெட் அட்வைஸ்!

MUST READ