Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டின் தொழில் வாய்ப்புகளை உலகறியச் செய்யும் முயற்சி: கஜகஸ்தான் வர்த்தகக் குழுவுடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு!

தமிழ்நாட்டின் தொழில் வாய்ப்புகளை உலகறியச் செய்யும் முயற்சி: கஜகஸ்தான் வர்த்தகக் குழுவுடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு!

-

- Advertisement -

சென்னையில் நடைபெற்ற இந்தியா – கஜகஸ்தான் வர்த்தக மன்றக் கூட்டத்தின் (India – Kazakhstan Trade Forum) ஒரு பகுதியாக, கஜகஸ்தான் நாட்டு உயர்நில வர்த்தகக் குழுவினரைத் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.தமிழ்நாட்டின் தொழில் வாய்ப்புகளை உலகறியச் செய்யும் முயற்சி: கஜகஸ்தான் வர்த்தகக் குழுவுடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு!

சந்திப்பின் முக்கிய அம்சங்கள்:
உயர்நிலைக் குழு வருகை:
கஜகஸ்தான் நாட்டின் வர்த்தகம் மற்றும் ஒருங்கிணைப்புத் துறை துணை அமைச்சர் ஐதார் அபில்தேபெகோவ் (Aidar Abildabekov) தலைமையிலான உயர்மட்ட வர்த்தகக் குழுவினர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

we-r-hiring

முதலீட்டு வாய்ப்புகள் விளக்கம்: இச்சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் சிறப்பான தொழில் உற்பத்தித் திறன், கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாநிலத்தில் உள்ள பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கஜகஸ்தான் குழுவினரிடம் அமைச்சர் கீர்த்தனா விரிவாக எடுத்துரைத்தார்.

இருதரப்பு உறவு: தமிழ்நாடு மற்றும் கஜகஸ்தான் இடையே வர்த்தகம், தொழில் கூட்டாண்மை மற்றும் பரஸ்பர முதலீடுகளை அதிகரிப்பது குறித்து இருதரப்பினரும் ஆலோசித்தனர்.

அமைச்சர் கீர்த்தனா ‘எக்ஸ்’ (X) பதிவு:
இச்சந்திப்பு குறித்துத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் நடைபெற்ற வர்த்தக மன்றக் கூட்டத்தில் கஜகஸ்தான் துணை அமைச்சர் ஐதார் அபில்தேபெகோவ் தலைமையிலான குழுவைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

தமிழ்நாட்டின் தொழில் வளம் மற்றும் முதலீட்டுச் சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், இருதரப்பு வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு நேரக் கட்டுப்பாடு: பிளாஸ்டிக்ப பைகளில் உணவு எடுத்து வரவும் தடை – அமைச்சர் அருண்ராஜ் அதிரடி அறிவிப்பு!

MUST READ