Homeசெய்திகள்தமிழ்நாடு"உதயநிதி கூடவே இருந்த நபர்.." திமுக ஆட்சியில் நடந்தது என்ன? 'மாப்பிள்ளை' கூட்டணி பற்றி அமைச்சர்...

“உதயநிதி கூடவே இருந்த நபர்..” திமுக ஆட்சியில் நடந்தது என்ன? ‘மாப்பிள்ளை’ கூட்டணி பற்றி அமைச்சர் நிர்மல்குமார் பகீர்!

-

- Advertisement -

கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளைச் சரிசெய்து, நிர்வாகத்தைச் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகச் சட்டத்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்."உதயநிதி கூடவே இருந்த நபர்.." திமுக ஆட்சியில் நடந்தது என்ன? 'மாப்பிள்ளை' கூட்டணி பற்றி அமைச்சர் நிர்மல்குமார் பகீர்!

இன்று (09-09-2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், திமுக ஆட்சிக் காலத்தில் நிலவிய அதிகாரத் துஷ்பிரயோகங்கள் மற்றும் வசூல் வேட்டைகள் குறித்துப் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.

we-r-hiring

அரசை நடத்தியது அதிகாரிகளா? ரத்தீஷா?
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பேசியதாவது, “கடந்த 5 வருட ஆட்சியில் திமுக செய்த தவறுகளைச் சரிசெய்து, மாநிலத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவர நாங்கள் கடுமையாகப் போராடி வருகிறோம். அவர்கள் மக்களை எந்த அளவுக்கு ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அண்மையில் முதல்வர் சட்டமன்றத்தில் ‘ரத்தீஷ்’ என்ற நபரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், அரசு அதிகாரிகள் அல்லது எம்.எல்.ஏ-க்கள் ஆட்சியை நடத்துவதுதான் ஜனநாயகம். ஆனால், ரத்தீஷ் என்ற ஒரு நபரும், ‘மாப்பிள்ளை’ கூட இருக்கிற நான்கு ஐந்து நபர்களும் சேர்ந்து அரசை நடத்துவது என்ன மாதிரியான நிர்வாகம்?”

10 துறைகளைப் பிரித்து வசூல் வேட்டை!
தொடர்ந்து பேசிய அவர், “ரத்தீஷ் என்பவரை அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் நேரில் சென்று பார்ப்பதும், ஒரு 10 பேர் ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு 10 அரசுத் துறைகளைப் பிரித்துக்கொண்டு வசூலில் ஈடுபடுவதுமாக ஆட்சி நடந்துள்ளது. இப்படிச் செய்தால் அரசு எப்படிச் சரியாக இயங்கும்? ரத்தீஷ் என்பவர் யார்? அவருக்கு அரசியல் தெரியுமா அல்லது மக்களைப் பற்றி ஏதேனும் தெரியுமா? அவர் எப்போதாவது மக்கள் போராட்டங்களிலாவது கலந்துகொண்டிருக்கிறாரா? எதுவுமே தெரியாத ரத்தீஷும், மாப்பிள்ளையுடன் இருக்கும் 10 பேருமே முழு அரசையும் ஆட்டிப்படைத்திருக்கிறார்கள்” என்று கடுமையாகச் சாடினார்.

"உதயநிதி கூடவே இருந்த நபர்.." திமுக ஆட்சியில் நடந்தது என்ன? 'மாப்பிள்ளை' கூட்டணி பற்றி அமைச்சர் நிர்மல்குமார் பகீர்!

குறிஞ்சி இல்லப் பவர் புரோக்கர்: தலைமறைவு பின்னணி என்ன?
உதயநிதியுடன் ரத்தீஷுக்கு இருந்த நெருக்கம் குறித்துச் சுட்டிக்காட்டிய அமைச்சர், “குறிஞ்சி இல்லத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் 24 மணி நேரமும் கூடவே இருந்த நபர்தான் இந்த ரத்தீஷ். அவர்தான் அப்போதைய ஆட்சியின் முதன்மை ‘பவர் புரோக்கராக’ (Power Broker) வலம் வந்தார். நான்கு ஐந்து முக்கிய துறைகளில் அவர்தான் நேரடியாக வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்தார். குற்றச்சாட்டுகள் வலுத்த நிலையில், அவர் மீது தற்போது ‘லுக் அவுட்’ (Lookout) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் எதற்காக இன்று தலைமறைவாக இருக்க வேண்டும்? சட்டம் தன் கடமையைச் செய்யும், காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.”

100 நாள் சாதனை: முதல்வர் தீவிர கண்காணிப்பு
தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அமைச்சர், “இப்படிப் புறையோடிப் போயிருந்த நிர்வாகத்தைச் சீரமைத்து மாற்றியமைத்து வருகிறோம் என்பதை மக்களுக்கு உணர்த்தி வருகிறோம். புதிதாகப் பொறுப்பேற்ற இந்த 100 நாட்களில் எவ்வளவு நலத்திட்டங்களைச் செய்ய முடியுமோ, அவ்வளவையும் முதல்வர் செய்து முடித்துள்ளார். ஒவ்வொரு நாளும் கண்ணும் கருத்துமாக இருந்து மக்களுக்குத் தேவையான பணிகளைச் செவ்வனே செய்து வருகிறார்” என்று தெரிவித்தார்.

நெருக்கடியான பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கூடாது: சென்னைக்கு வெளியே ‘தனி நிர்வாக நகரம்’ அமைக்க பா.ம.க. வலியுறுத்தல்!

MUST READ