Homeசெய்திகள்தமிழ்நாடு"சட்டமன்றத்துல மாஸ் காட்டும் தவெக... பின்டவுன் பண்ண முடியாம திணறும் திமுக! மூத்த பத்திரிகையாளர் மணி...

“சட்டமன்றத்துல மாஸ் காட்டும் தவெக… பின்டவுன் பண்ண முடியாம திணறும் திமுக! மூத்த பத்திரிகையாளர் மணி அதிரடி!”

-

- Advertisement -

தமிழகச் சட்டமன்றத்தில் தற்போதைய அரசியல் சூழல், புது எதிரியான தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) பிரதான எதிர்க்கட்சியான திமுக எதிர்கொள்வதில் சந்திக்கும் சவால்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி விரிவான அதிரடிப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்."சட்டமன்றத்துல மாஸ் காட்டும் தவெக... பின்டவுன் பண்ண முடியாம திணறும் திமுக! மூத்த பத்திரிகையாளர் மணி அதிரடி!"

பாரம்பரியமற்ற புது எதிரி: திணறும் திமுக!

சட்டமன்றத்தில் தவெக-வின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் திமுகவின் அணுகுமுறை குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில், “கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவை மட்டுமே பிரதான அரசியல் எதிரியாகப் பார்த்து பழகிய இயக்கம் திமுக. அதிமுகவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது திமுகவுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், தற்போது தவெக போன்ற முற்றிலும் வேறுபட்ட, பாரம்பரியமற்ற (Unconventional) ஒரு புதிய எதிரி களத்தில் இருக்கும் போது, அவர்களைச் சரியாகப் பின்டவுன் (Pin-down) செய்ய முடியாமல் திமுக திணறுகிறது” என்று சுட்டிக்காட்டினார்.

we-r-hiring

தொடர்ந்து பேசிய அவர், “அரசியல் என்பது வெறும் 10 சதவீதம் மட்டுமே சட்டமன்றத்திற்குள் நடக்கிறது; மீதி 90 சதவீத அரசியல் வெளிக்களத்தில்தான் நடக்கிறது. மெயின்ஸ்ட்ரீம் மீடியாவைப் பற்றி தவெக கவலைப்படுவதே இல்லை. தொலைக்காட்சி விவாதங்களில் தங்கள் பிரதிநிதிகள் இல்லையென்றாலும், சமூக வலைதளங்கள் மூலமாகவே தங்களுக்கான அரசியலை அவர்கள் வெற்றிகரமாகச் கொண்டு சேர்த்துவிடுகிறார்கள்” என்று தெரிவித்தார்."சட்டமன்றத்துல மாஸ் காட்டும் தவெக... பின்டவுன் பண்ண முடியாம திணறும் திமுக! மூத்த பத்திரிகையாளர் மணி அதிரடி!"

விஜய்யின் மக்கள் ஆதரவும் சமூக வலைதளப் பலமும்

முதலமைச்சர் விஜய்யின் இமேஜ் மற்றும் மக்கள் ஆதரவு குறித்துப் பேசிய மணி, “தற்போது முதலமைச்சர் விஜய்க்கு மக்களிடம் மிகப்பெரிய அளவிலான நன்மதிப்பும் (Public Goodwill) ஆதரவும் இருக்கிறது. அது குறைய குறைந்தது 2 ஆண்டுகள் வரை ஆகும். திமுகவின் சமூக வலைதளப் பிரிவு பல சலுகைகளுக்காகச் செயல்படும் வேளையில், விஜய்யின் ஆதரவாளர்கள் தீவிரமான அர்ப்பணிப்புடன் (Conviction) களப்பணியாற்றுகிறார்கள்; இதுவே இருதரப்பிற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம்” எனத் தெரிவித்தார்.

“மு.க.ஸ்டாலின் உள்நோக்கிச் சுருங்கிவிட்டாரா?” – முப்பெரும் விழா சர்ச்சை!

தேர்தல் பின்னடைவுக்குப் பின் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள் குறித்து மணி கடும் விமர்சனத்தை முன்வைத்தார். “1991-ல் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின் திமுக கடுமையான தோல்வியைச் சந்தித்தபோது, அடுத்த இரண்டு மாதங்களிலேயே கலைஞர் கருணாநிதி பேரணி, மாநாடு, பொதுக்கூட்டம் என நடத்தி தொண்டர்களை வீதிக்குக் கொண்டு வந்து கட்சியை உயிர்ப்புடன் வைத்தார். ஆனால், தேர்தல் முடிந்து 4 மாதங்கள் ஆகியும் மு.க.ஸ்டாலின் ஒரு பொதுக்கூட்டத்தைக் கூட நடத்தவில்லை.

திமுக வரலாற்றில் மிக முக்கியமான ‘முப்பெரும் விழா’ செப்டம்பர் 15, 16, 17 தேதிகளில் வருவது வழக்கம். ஆனால், இம்முறை அந்த விழாவை அண்ணா அறிவாலயத்திற்குள் 4 சுவருக்குள் நடத்துகிறார்கள். கட்சித் தலைவர் உள்நோக்கிச் சுருங்கிவிட்டார் (Inward); தொண்டர்களோடும் மக்களோடும் வெளிப்படையாக வந்து நிற்கும் தலைமையாக அவர் முன்னிற்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்."சட்டமன்றத்துல மாஸ் காட்டும் தவெக... பின்டவுன் பண்ண முடியாம திணறும் திமுக! மூத்த பத்திரிகையாளர் மணி அதிரடி!"

உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு குறித்து கணிப்பு

எதிர்க்கட்சி வரிசையில் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு குறித்துப் பேசிய அவர், “சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் மிக கூலாகவும், ரிலாக்ஸ்டாகவும், வலுவான கேள்விகளை எழுப்பி டீசண்டாகப் செயல்படுகிறார். அவருக்குப் பின்னால் வலுவான கட்சி அமைப்பும், குடும்பப் பின்னணியும் உள்ளது. எதிர்காலத்தில் நல்ல எதிர்க்கட்சித் தலைவராக அவரால் வர முடியும். எனினும், ஆளும்கட்சியின் புகழுக்கும் வெளிச்சத்திற்கும் ஈடுகொடுக்க அவர் இன்னும் சில தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இரட்டை அர்த்தப் பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.

“காத்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்!”

பேட்டியின் நிறைவாக, “திமுகவுக்குத் தற்போது உடனடியாகத் தேவைப்படுவது பொறுமைதான். இந்த அரசு மீது மக்களுக்கு அதிருப்தி வர 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும்; மக்கள் மனதில் திமுக மீதான வெறுப்பு குறைய 5 ஆண்டுகள் முழுமையாக ஆக வேண்டும். அதற்குள் அவசரப்பட்டு அரசை வீழ்த்த நினைத்தால் அது திமுகவுக்கே பின்னடைவாக முடியும். கலைஞர் இல்லாத சூழலில், ஒரு வலுவான எதிர்க்கட்சியாக திமுக தன்னைத் தகவமைத்துக் கொள்ளாவிட்டால் அது ஜனநாயகத்திற்கே நல்லதல்ல” எனக் கூறியுள்ளாா்.

த.வெ.க. இடைத்தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு: தலைமை தீவிர ஆலோசனை!

MUST READ