Homeசெய்திகள்தமிழ்நாடுநெல் கொள்முதலில் தொடரும் லஞ்சம்: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! -...

நெல் கொள்முதலில் தொடரும் லஞ்சம்: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

-

- Advertisement -

தமிழகத்தில், குறிப்பதாகக் காவிரிப் பாசன மாவட்டங்களில் கோடைப் பருவ நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.325 வரை லஞ்சமாகப் பறிக்கப்படும் அவலம் தொடர்வதாகவும், இதனைத் தடுத்து நிறுத்தி விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என்றும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.நெல் கொள்முதலில் தொடரும் லஞ்சம்: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

we-r-hiring

வாரக்கணக்கில் காத்திருப்பும், லஞ்சக் கொடுமையும்
காவிரிப் பாசனப் பகுதிகளில் சுமார் 1.60 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட கோடைப் பருவ நெல் அறுவடை தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆனால், கொள்முதல் நிலையங்களில் போதிய வசதிகள் இல்லாததால் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்ய ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், கொள்முதல் நிலையங்களில் ஊழல் கட்டுக்கடங்காமல் நடைபெறுகிறது
40 கிலோ எடை கொண்ட ஒரு நெல் மூட்டையை எடை போடுவதற்கு ரூ.40 முதல் ரூ.60 வரை கட்டாய லஞ்சமாகப் பெறப்படுகிறது. 40 கிலோவுக்கு மேல் கூடுதலாக எடை வைப்பது மற்றும் பதரைத் தூற்றுவதாகக் கூறி மூட்டைக்கு 1.5 கிலோ வரை ஒதுக்குவது என ஒரு மூட்டைக்குக் கூடுதலாக 3 கிலோ நெல் பறிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு குவிண்டால் நெல்லுக்குப் பணமாக ரூ.150-ம், நெல்லாக ரூ.175-ம் என மொத்தமாக ரூ.325 வரை விவசாயிகளிடமிருந்து லஞ்சமாகப் பறிக்கப்படுகிறது.

கடைநிலை ஊழியர்கள் மீதான நடவடிக்கை மட்டும் போதாது!
சமீபத்தில் கடலூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்ட உணவுத்துறை அமைச்சர், விவசாயி ஒருவரைத் தொடர்புகொண்டு பேசியபோது மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில் அங்குள்ள எழுத்தர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அமைச்சரின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும், ஊழலுக்கான அடிப்படை மூலக்காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்யாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக கடைநிலை ஊழியர்களை மட்டும் இடைநீக்கம் செய்வதால் இந்த ஊழல் கலாச்சாரம் ஒழியப்போவதில்லை.

கொள்முதல் நிலையப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகள்
கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறப்படுவதற்குப் பணியாளர்கள் தரப்பில் கூறப்படும் காரணங்களையும் அரசு புறக்கணிக்க முடியாது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் அத்தியாவசியச் செலவுகளுக்காக வழங்கப்பட வேண்டிய ரூ.20,000 நிரந்தர முன்வைப்புத் தொகை (Permanent Advance) முறையாக வழங்கப்படுவதில்லை. நெல் எடை போடும் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.10 கூலி மிகவும் சொற்பமானது. இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்து, பணியாளர்களுக்கு உரிய ஊதியத்தையும், மையங்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுத்தால் மட்டுமே ஊழலை முழுமையாக ஒழிக்க முடியும்.

அரசுக்குக் கோரிக்கை
அரசு கொள்முதல் நிலையங்களில் கூடுதல் விலை கிடைக்கிறது என்ற நம்பிக்கையில்தான் விவசாயிகள் இங்கு வருகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் விவசாயிகள் அனைவரும் தனியார் வியாபாரிகளிடம் நெல்லை விற்கத் தொடங்கி விடுவார்கள். அது நியாயவிலைக் கடைகளுக்குத் தேவைப்படும் அரிசி விநியோகத்தைப் பெரிய அளவில் பாதிக்கும். எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் சுரண்டல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, லஞ்சம் இன்றி உடனுக்குடன் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளாா்.

டெல்லி தடியடி சம்பவம்.. தமிழகத்தில் வெடித்த கொந்தளிப்பு! பாவலர் பாலன் இல்லத்தில் கூடும் இளைஞர்கள்!

MUST READ