திருச்சி, சென்னையில் உள்ள என்னுடைய வீட்டிலும் என்னுடைய சகோதரர் வீட்டிலும் சோதனை செய்தார்கள் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. வழக்கமாக பயன்படுத்தும் ஒரு கோப்பையும் என்னுடைய சகோதரரின் வரவு செலவு கணக்கு தொடர்பான விவரங்களையும் எடுத்துக் கொண்டார்கள்..


8 மணி முதல் 3 மணி வரை சோதனை நடைபெற்றது ஒவ்வொன்றாக பார்த்துவிட்டு அது தொடர்பாக எழுதி கையெழுத்து வாங்கி உள்ளார்கள்.
நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினோம்.
அவர்கள் கூறுவது போல் டெண்டர் தொடர்பாக நான் யாரிடமும் பேசியது கிடையாது.
வழக்கு தொடர்பாக அடுத்து என்ன கூறுகிறார்களோ அதை கேட்டு சட்டப்படி சந்திப்போம்.
லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே ஒரு வழக்கு என்மீது பதிவு செய்துள்ளார்கள் அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது அது குறித்து அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவில்லை.
நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை நீதிமன்றத்திற்கு சென்று நாங்கள் நிரபராதி என்பதை நிரூபிப்போம்.
சட்டசபையில் அரசை நோக்கி நான் கேள்வி எழுப்புவதால் என்னை மிரட்டுவதற்காக கூட இது போன்ற சோதனை அவர்கள் செய்யலாம்.
அரசை அடிக்கடி நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள் என செய்தியாளர்கள் என்னிடம் சொல்வது எனக்கு பெருமையாக உள்ளது.
இந்த சோதனை பழிவாங்கும் நடவடிக்கை தான்.
சட்டசபையில் ஒன்றிய அரசு குறித்து அமைச்சர் வன்னியரசு தேசிய கருத்தை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என அமைச்சர் ஆதார்ஜுனா கூறியது ஒன்றிய அரசும் மாநில அரசும் ஒற்றுமையாக இருப்பதை காட்டுகிறது மத்திய அரசிடம் எந்த கெட்ட பெயரும் ஆகி விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு செயல்பட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே முதல்வராக இருந்தவர்கள் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது இரண்டு முறை என் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தார்கள் தற்பொழுது மூன்றாவது முறை சோதனை நடைபெற்றுள்ளது. கால் புணர்ச்சியின் காரணமாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
திமுக தலைவர் என்னிடம் பேசினார். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தினார்
