Homeசெய்திகள்தமிழ்நாடுதவெக ஆட்சியில் தமிழகம் 17-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது — புதுக்கோட்டையில் திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி...

தவெக ஆட்சியில் தமிழகம் 17-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது — புதுக்கோட்டையில் திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி விளாசல்!

-

- Advertisement -

புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட மாலையீடு அருகே புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.தவெக ஆட்சியில் தமிழகம் 17-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது — புதுக்கோட்டையில் திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி விளாசல்!

இக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக முன்னாள் அமைச்சரும், திருமயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான எஸ். ரகுபதி, கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

we-r-hiring

“ரீல்ஸ் செய்து ஆட்சிக்கு வந்த தவெக” எஸ். ரகுபதி கூறியதாவது:

“தவெக அரசு எந்தவிதச் சாதனையும் செய்யாமல், வெறும் ரீல்ஸ் செய்தும் பொய்யான தகவல்களைப் பரப்பியும் தான் ஆட்சிக்கு வந்தது.

விஜய் முதலமைச்சராக வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 45,000 கோடி ரூபாய் கடன் வாங்கியது தான் இந்த ஆட்சியின் சாதனையாக உள்ளது.”

சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் ஜனநாயக படுகொலை
சட்டமன்ற நடைமுறைகள் குறித்துப் பேசிய அவர்:

சினிமா படப்பிடிப்பு தளம் போல சட்டமன்றம்: “சட்டமன்றத்தில் எங்களை ‘ஓடக்கூடாது’ என்று சொல்லிவிட்டு, ஓடிக் காண்பித்தவர் முதலமைச்சர் ஜோசப் விஜய் தான்.

சினிமாவில் ஓடுவதைப் போல் அவர் ஓடியுள்ளார். நாங்கள் சட்டமன்றத்தைப் பார்க்கவில்லை; சினிமா படப்பிடிப்பு தளத்தைத் தான் பார்த்து வருகிறோம்.”

பாரபட்சமான ஒளிபரப்பு: திமுகவை டேமேஜ் செய்ய வேண்டும் என்ற நோக்கில் சட்டமன்றத் நேரலையைத் தவெக அரசு ஒளிபரப்புகிறது. ஆனால், டேமேஜ் ஆவது தவெக தான். எதிர்க்கட்சியினரின் குரல்வளையை இந்த அரசு நசுக்கி வருகிறது.”

இடத்தைக் கூறாமல் அறிவிக்கப்படும் திட்டங்கள்
அரசின் திட்டங்களை விமர்சித்துப் பேசிய அவர்:

மர்மமான அறிவிப்புகள்: “20 லட்சம் சதுர அடியில் ₹1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்கிறார்கள்; ஆனால் இடம் எங்கே என்று சொல்லவில்லை. அதேபோலத் தான் குளோபல் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பிக் சிட்டி திட்டமும் இடத்தைக் கூறாமல் மர்மமாக வைக்கப்பட்டுள்ளது.”

விமான நிலைய விவகாரம்: முந்தைய ஆட்சியில் பரந்தூர் இடம் முறையாகத் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், புதிய இடத்தைத் தேர்வு செய்து ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறுவதற்குள் இன்னும் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகிவிடும்.

அதற்குள் அண்டை மாநிலங்கள் நம்மை விட மேலே சென்றுவிடும். இந்தியாவில் 2-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது 17-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

கே.என்.நேரு சோதனை & இசக்கி சுப்பையா ராஜினாமா
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டை ஆட்கள் வைத்துச் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து வீட்டைச் சுத்தம் செய்துவிட்டுச் சென்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

விசில் அரசியல் எடுபடாது: இடைத்தேர்தலைச் சந்தித்து தவெக எம்.எல்.ஏ ஆகிவிடலாம் என எண்ணி இசக்கி சுப்பையா ராஜினாமா செய்திருக்கலாம். மக்கள் ஏமாளிகள் அல்ல.

இனி எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டு மக்களை விசில் ஏமாற்ற முடியாது. விசில் அடித்தால் தியேட்டரில் தான் அடிக்க முடியும்.”

கட்டமைப்பே இல்லாத கட்சி தவெக
மகளிர் உரிமைத்தொகை, காலை உணவுத் திட்டம் போன்றவற்றை நாங்கள் கஜானாவைச் சரியாகப் பராமரித்ததால் தான் செயல்படுத்த முடிந்தது. தவெக என்பது கட்டமைப்பே இல்லாத கட்சி;

திமுகவை விமர்சிக்க அவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. உள்ளாட்சி அதிகாரிகளை மிரட்டும் தவெக நிர்வாகிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம் என்று எஸ். ரகுபதி தெரிவித்தார்.

“டெண்டர் முறைகேடு தொடர்பாக சோதனை செய்ய வந்தார்கள்” – முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேட்டி

MUST READ