Homeசெய்திகள்தமிழ்நாடு"பொய் வழக்குகளுக்கு திமுக பயப்படாது": பாளையங்கோட்டை சிறையில் எம்.எல்.ஏவை சந்தித்த பின் கனிமொழி எம்பி ஆவேசம்!

“பொய் வழக்குகளுக்கு திமுக பயப்படாது”: பாளையங்கோட்டை சிறையில் எம்.எல்.ஏவை சந்தித்த பின் கனிமொழி எம்பி ஆவேசம்!

-

- Advertisement -

பொய் வழக்குகள், கைதுகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சக்கூடியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் யாருமே இல்லை என்றும், எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்ளத் தயார் என்றும் கனிமொழி எம்பி தெரிவித்தார்."பொய் வழக்குகளுக்கு திமுக பயப்படாது": பாளையங்கோட்டை சிறையில் எம்.எல்.ஏவை சந்தித்த பின் கனிமொழி எம்பி ஆவேசம்!

​பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு, கனிமொழி எம்பி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

we-r-hiring

​”சிறைவாசம் திமுகவுக்குப் புதியதல்ல”
​செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “திராவிட முன்னேற்றக் கழகத்திற்குச் சிறைவாசம் என்பது புதிய ஒன்று அல்ல. 1965-இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது கலைஞர் கருணாநிதி இருந்த அதே பாளையங்கோட்டை சிறையில்தான் தற்போது சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனும் இருக்கிறார். திமுகவைச் சேர்ந்தவர்கள் யார் சிறைக்கு வந்தாலும் அதை பெருமையாகத்தான் நினைப்பார்கள். அதே பெருமையோடுதான் மார்க்கண்டேயனும் சிறையில் இருக்கிறார்” என்று குறிப்பிட்டார்."பொய் வழக்குகளுக்கு திமுக பயப்படாது": பாளையங்கோட்டை சிறையில் எம்.எல்.ஏவை சந்தித்த பின் கனிமொழி எம்பி ஆவேசம்!

​”எதிர்க்கட்சிகளை அடக்கவே காவல்துறை பயன்பாடு”
​தொடர்ந்து பேசிய அவர், “சட்டமன்ற உறுப்பினரைத் தவறாகப் பேசினார் என்ற காரணத்திற்காகக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். தினமும் பெண்களுக்கு எதிராகவும் குழந்தைகளுக்கு எதிராகவும் குற்றங்கள் நடந்து வருகின்றன. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீதே குற்றம் சொல்லக்கூடிய அளவிற்குச் சூழல் உள்ளது. ஆனால், அவரைச் கூப்பிட்டு விசாரிக்கக் கூட இந்த அரசு தயாராக இல்லை.” எனக் குற்றம் சாட்டினார்.

​மேலும், “முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் வழக்கு போட்டுச் சிறையில் அடைக்க முயற்சி செய்தார்கள். அதுமட்டுமின்றி, யூடியூபர்கள், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் என அனைவரையும் சிறைக்கு அனுப்பவே இந்த அரசு முயற்சி செய்கிறது. எதிரெதிர்க்கட்சிகளை அடக்குவதற்கு மட்டுமே காவல்துறையை இந்த அரசு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது” என்று விமர்சித்தார்.

​”பாஜகவின் பெயரைக் கூறக்கூட தயக்கம்”
​ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளை விமர்சித்த கனிமொழி எம்பி, “ஜனநாயகத்தில் மாற்றுக்கருத்துக்களையும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் அவர்களிடம் இல்லை. நீட் தேர்வை கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாடகர் தெருக்குறள் அறிவைக் கைது செய்திருக்கிறார்கள். டெல்லியில் மாணவர் போராட்டம் எப்படி கையாளப்படுகிறதோ, அதேபோல்தான் இங்கும் போராடுபவர்களைக் கையாள்கிறார்கள். பாஜக என்ற பெயரைக் கூறுவதற்குக் கூடத் தயக்கத்தோடு ஆட்சி நடத்துகிறார்கள்” எனக் கூறினார். ​தமிழ்நாட்டின் நலன் மற்றும் கழகத்தின் கொள்கைகள் என்று வரும்போது திமுக எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காது என்றும், அனைத்துப் பொய் வழக்குகளையும் சட்டரீதியாகச் சந்திக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

​காவிரி அணைகளில் 60 டி.எம்.சி நீர் இருப்பு: தமிழகத்திற்குக் காவிரி நீரைத் திறக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

MUST READ