spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுடாஸ்மாக் பணியாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாபெரும் பேரணி நடைபெறும் – எடப்பாடி அறிவிப்பு

டாஸ்மாக் பணியாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாபெரும் பேரணி நடைபெறும் – எடப்பாடி அறிவிப்பு

-

- Advertisement -

டாஸ்மாக் பணியாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிப்ரவாி 11-ம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் பேரணி நடைபெறும் என  எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.டாஸ்மாக் பணியாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாபெரும் பேரணி நடைபெறும் – எடப்பாடி அறிவிப்புஇதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “டாஸ்மாக் நிறுவனத்தில் தமிழ் நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளான, பணி நிரந்தரம் செய்வது, போதுமான ஊழியர்கள் நியமனம் செய்யப்படாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் வரும் 11ம் தேதி புதன் கிழமை காலை 10 மணியளவில், அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலைமையில் அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் கமலக்கண்ணன் முன்னிலையில், சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் வரை பேரணியாகச் சென்று நிர்வாக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

நாட்டில் என்ன நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியாது – எடப்பாடி

MUST READ