HomeBreaking Newsநீதிமன்ற வழக்குகளில் தவெக-வுக்குப் பின்னடைவு: அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி ஜாமீனால் முதலமைச்சர் விஜய் அதிருப்தி?

நீதிமன்ற வழக்குகளில் தவெக-வுக்குப் பின்னடைவு: அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி ஜாமீனால் முதலமைச்சர் விஜய் அதிருப்தி?

-

- Advertisement -

சமீபகாலமாக நீதிமன்ற விவகாரங்களில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) நினைத்தபடி முடிவுகள் வராததால், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, திமுக பிரமுகர்களுக்கு எதிரான வழக்குகளில் தவெக எடுத்த சட்ட நடவடிக்கைகள் தற்காலிகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செந்தில் பாலாஜி

we-r-hiring

கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தவெக-வுக்குச் சாதகமான முடிவு கிடைத்த உற்சாகத்தில், அடுத்தடுத்த வழக்குகளில் தவெக காட்டிய தீவிரம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்று கூறப்படுகிறது.

​1. அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு:
​கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரது முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த ஒன்றரை மணி நேரத்தில், அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

காவல்துறை ஜீப்பில் அழைத்துச் செல்லப்பட்டு 6 மணி நேர விசாரணைக்குப் பின், திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் தவெக தீவிரமாகச் செயல்பட்டும், அவரைச் சிறையில் அடைக்க முடியாமல் போனது தவெக-வுக்கு முதல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

​2. செந்தில் பாலாஜி வழக்கு:
​இதேபோல், தவெக அரசைத் தடம் புரளச் செய்ய அக்கட்சியின் எம்.எல்.ஏ-விடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாகப் பதியப்பட்ட வழக்கில், செந்தில் பாலாஜியைத் தொடர்புபடுத்தி தவெக அரசுத் தரப்பு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் முன்வைத்தது.

அரசுத் தரப்பு வாதம்:
அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, கைதான குற்றவாளிகள் கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் சந்தித்துப் பேசியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், இந்த ரூ.35 கோடி பேரத்தில் ‘ஹவாலா’ பணப் பரிவர்த்தனை இருக்க வாய்ப்புள்ளதால் செந்தில் பாலாஜியைக் கைது செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.

திமுக தரப்பு வாதம்:
ஆனால், தவெக எம்.எல்.ஏ-விடம் செந்தில் பாலாஜி நேரடியாக என்ன பேசினார் என்பதற்கான உறுதியான ஆடியோ அல்லது டிஜிட்டல் ஆதாரங்கள் தவெக தரப்பிடம் இல்லை என்பதையும், முதல் தகவல் அறிக்கையில் (FIR) செந்தில் பாலாஜியின் பெயர் நேரடியாக இடம் பெறவில்லை என்பதையும் திமுக தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
​இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு முன்பாக செந்தில் பாலாஜியைக் கைது செய்ய வேண்டும் என்ற தவெக-வின் திட்டம் இதன் மூலம் நிறைவேறாமல் போனது.

அரசியல் பரபரப்பு:
அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் திமுக-வை முடக்க நினைத்த இரண்டு முக்கிய வழக்குகளிலும், திமுக தரப்பு நீதிமன்றத்தில் சாதகமான உத்தரவுகளைப் பெற்று தவெக-வுக்குப் பதிலடி கொடுத்துள்ளது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் கிடைத்த வெற்றியைத் தக்கவைக்க முடியாமல், அடுத்தடுத்த வழக்குகளில் கோட்டை விட்டதால் முதலமைச்சர் விஜய் தற்போதும் அப்செட்டில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ