Homeசெய்திகள்தமிழ்நாடு​162 கட்டணமில்லா மகளிர் பேருந்துகள் முடக்கம்? போக்குவரத்து கழகத்தின் கணக்கில் குளறுபடி எனப் புகார்!

​162 கட்டணமில்லா மகளிர் பேருந்துகள் முடக்கம்? போக்குவரத்து கழகத்தின் கணக்கில் குளறுபடி எனப் புகார்!

-

- Advertisement -

சென்னை மாநகரில் கடந்த சில வாரங்களாக மகளிருக்கான கட்டணமில்லா ‘விடியல்’ பேருந்துகள் பல வழித்தடங்களில் சரிவர இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கடந்த மாதத்திலிருந்து தற்போது வரை சுமார் 162 மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படாமல் முடக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.​162 கட்டணமில்லா மகளிர் பேருந்துகள் முடக்கம்? போக்குவரத்து கழகத்தின் கணக்கில் குளறுபடி எனப் புகார்!​தவெக ஆட்சியில் திட்டத்திற்கு சுணக்கமா?
​தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிருக்கான விடியல் கட்டணமில்லா பேருந்து திட்டம், அன்றாடம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இந்நிலையில், தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி அமைந்து 60 நாட்கள் நிறைவடைந்துள்ள சூழலில், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசு போக்குவரத்து கழகம் சுணக்கம் காட்டி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

​உண்மையை மறைக்கிறதா மாநகர போக்குவரத்து கழகம்?
​நேற்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (MTC) தரப்பில், சென்னையில் மொத்தம் 1,724 பேருந்துகள் இயக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜூன் 23, 2026 அன்று வெளியாகியுள்ள ‘தினந்தோறும் இயக்கப்படாத பேருந்துகள்’ பட்டியலின்படி, 162 கட்டணமில்லா மகளிர் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது அம்பலமாகியுள்ளது. ​இதன் மூலம், கடந்த மார்ச் மாதத்திலிருந்தே 1,724 பேருந்துகள் தடையின்றி இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்து வரும் புள்ளிவிவரங்கள் உண்மைக்கு புறம்பானவை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

we-r-hiring

​ரகசியம் காக்கப்படுகிறதா ‘இயக்கப்படாத பேருந்துகள்’ பட்டியல்?
​மாநகர போக்குவரத்து கழகம் தினந்தோறும் எந்தெந்த பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற பட்டியலைத் தயாரிப்பது வழக்கம். ஆனால், இந்தத் தரவுகள் பொதுவெளியில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்துவதால், கடந்த ஒரு வார காலமாக அந்தப் பட்டியலை எழுத்துப்பூர்வமாக வெளியிடாமல், பணியாளர்களுக்கு வாய்மொழியாக மட்டுமே அதிகாரிகள் தெரிவித்து வருவதாகப் போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

​பணியாளர்கள் பற்றாக்குறையா? அரசியல் காரணமா?
“கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் தற்போதைய அரசு இதில் ஆர்வம் காட்டவில்லையா அல்லது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் பற்றாக்குறை காரணமா?” எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால், ஏழை மற்றும் நடுத்தரப் பெண்கள் அதிகக் கட்டணம் கொடுத்து தனியார் வாகனங்களையோ அல்லது சாதாரணப் பேருந்துகளையோ நாட வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தேசிய விருது பெற்ற ‘டூலெட்’ பட இயக்குநர் செழியன் காலமானார்..!

MUST READ