Homeசெய்திகள்தமிழ்நாடு’மகளிர் விடியல் பயணம்’ பெயர் மாற்றம்.. பெண்கள் இலவச பயணம் செய்யும் பேருந்துகளில் "விடியல்" நீக்கம்..!

’மகளிர் விடியல் பயணம்’ பெயர் மாற்றம்.. பெண்கள் இலவச பயணம் செய்யும் பேருந்துகளில் “விடியல்” நீக்கம்..!

-

- Advertisement -

’மகளிர் விடியல் பயணம்’ பெயர் மாற்றம்.. பெண்கள் இலவச பயணம் செய்யும் பேருந்துகளில் "விடியல்" நீக்கம்..!

தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட முக்கியத் திட்டங்களின் பெயர்களைத் தற்போதைய அரசு தொடர்ந்து மாற்றி வரும் நிலையில், அடுத்த அதிரடியாகப் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டமான ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயர் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

we-r-hiring

ஏற்கனவே ‘நான் முதல்வன்’, ‘முதல்வர் படைப்பகம்’ போன்ற முக்கியத் திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு அரசியல் களத்தில் பெரும் விவாதம் நடந்து வரும் வேளையில், தற்பொழுது இந்தத் திட்டத்தின் பெயரும் மாற்றப்பட்டிருப்பது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

கன்னியாகுமரியில் உடனே தொடங்கிய மாற்றம்:

இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ’விடியல்’ என்கிற பெயர்களை நீக்கிவிட்டு, ’விடியல் பயணம்’ என்கிற பெயர்களை இடம்பெறச் செய்துள்ளனர். மாற்றம்: குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் முதற்கட்டமாக 366 அரசு நகரப் பேருந்துகளின் டிஜிட்டல் போர்டு மற்றும் ஸ்டிக்கர்களில் (Town Buses) ‘மகளிர் விடியல் பயணம்’ என்றிருந்த பழைய வாசகங்கள் முழுமையாக அகற்றப்பட்டு, புதிய பெயராக ‘மகளிர் பயணம்’ மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
’மகளிர் விடியல் பயணம்’ பெயர் மாற்றம்.. பெண்கள் இலவச பயணம் செய்யும் பேருந்துகளில் "விடியல்" நீக்கம்..!
பேருந்துகளின் முகப்பு மற்றும் பக்கவாட்டுகளில் பெயர் மாற்றப்பட்டது மட்டுமின்றி, நடத்துனர்கள் மூலம் மகளிருக்கு நாள்தோறும் விநியோகிக்கப்படும் ‘இலவசப் பயணச்சீட்டிலும்’ (Free Bus Tickets) புதிய பெயரே அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

திமுக கடும் எதிர்ப்பு – அரசியல் மோதல் தீவிரம்

தமிழக அரசின் இந்தத் தொடர் பெயர் மாற்ற நடவடிக்கைகளுக்குப் பிரதான எதிர்க்கட்சியான திமுகவினர் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். “முந்தைய ஆட்சியில் மக்களின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களை அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த அரசு மாற்றி வருகிறது. திட்டத்தின் பெயர்களை மாற்றினாலும், அது மக்கள் மனதில் யாருடைய திட்டம் என்பதாகப் பதிந்திருக்கிறதோ அதை யாராலும் மாற்ற முடியாது,” என்று திமுக தரப்பில் மிகக் காட்டமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

 

MUST READ