- Advertisement -
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சி தலைவராகப் பொறுப்பு வகித்து வருபவர் சூர்யபிரகாஷ்.
இவர் திமுக காங்கேயம் நகர இளைஞரணி அமைப்பாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று திமுகவில் இருந்து விலகிய சூர்யபிரகாஷ், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார்.
காங்கேயம் நகராட்சி தலைவராக இருக்கும் அவர் தவெகவில் இணைந்திருப்பது அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
