Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்புகள் நீதி சார்ந்ததாக அமைவது குறைந்து வருவது கவலை அளிக்கிறது...

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்புகள் நீதி சார்ந்ததாக அமைவது குறைந்து வருவது கவலை அளிக்கிறது – கே. சுப்பராயன் எம்.பி. கருத்து!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவுக்கு அருகில் உள்ள சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், நீதிமன்றத் தீர்ப்புகள் நீதி சார்ந்ததாக அமைவது குறைந்து வருவது கவலை அளிப்பதாக கே. சுப்பராயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்புகள் நீதி சார்ந்ததாக அமைவது குறைந்து வருவது கவலை அளிக்கிறது – கே. சுப்பராயன் எம்.பி. கருத்து!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையின் உட்பொருள் மற்றும் மறைபொருள் என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

தீபம் ஏற்றியது சரியா, தவறா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்பதையே இந்த இடைக்காலத் தடை உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீபம் ஏற்றலாமா, கூடாதா என்பது உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள நிலையில், தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உயர் நீதிமன்றத் தீர்ப்பு எந்த வகையான நியாயத் தீர்ப்பு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கவுள்ள இறுதித் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பதற்கு, தற்போதைய நிகழ்வுகள் முன்அடையாளமாக அமைந்துவிடும் என மக்கள் கருதமாட்டார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குழப்பத்தைத் தீர்ப்பதற்காக வழங்கப்பட்ட தீர்ப்பே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தினால் என்ன செய்வது எனக் கேள்வி எழுப்பியுள்ள கே. சுப்பராயன், “காலம் கலிகாலம்! எதுவும் நடக்கலாம்!” எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கூடாது – திருமுருகன் காந்தி வலியுறுத்தல்!

MUST READ