Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்!

தமிழகத்தில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடர்பான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் (நவம்பர் 21, 22) நடைபெறுகிறது.தமிழகத்தில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்!

இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, கடந்த நவம்பர் 12ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் தேவையான திருத்தங்களுக்காக https://voters.eci.in என்ற இணையதளம் மற்றும் ECINET செயலி வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் – 9.16 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு!

MUST READ