Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி: தீர்ப்பை வரவேற்கிறோம் – பாஜக மாநில தலைவர்...

திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி: தீர்ப்பை வரவேற்கிறோம் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை பாஜக வரவேற்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி: தீர்ப்பை வரவேற்கிறோம் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி!

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நியாயமானது என்றும், தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தத் தீர்ப்பின் மூலம் தர்மம் மீண்டும் வென்றுள்ளதாகவும் கூறினார்.

மேலும், 1923, 1931, 1996, 2025 ஆகிய ஆண்டுகளில் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், தற்போது 2026-ஆம் ஆண்டிலும் அதே விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பைப் பெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பை பாஜக வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.

தமிழக அரசின் செயல்பாடு மிகவும் வருத்தமளிப்பதாக விமர்சித்த நயினார் நாகேந்திரன், இந்து சமய அறநிலையத்துறை என்பது கோயில்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என்றும், ஒரு கோயிலில் தீபம் ஏற்றக்கூடாது எனக் கூறி உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்திருப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

கோயில்களுக்குப் பக்தர்கள் வழங்கும் காணிக்கைப் பணத்தை இதுபோன்ற வழக்குகளுக்குச் செலவிடுவது வேடிக்கையாக இருப்பதாகக் கூறிய அவர், தீபம் ஏற்ற அனுமதி கோரி உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்கு நடத்தியதற்காக எத்தனை கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினார்.

வழக்கறிஞர்களுக்கான கட்டணம், போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட அனைத்து செலவினங்களின் விவரங்களையும் தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழக வெற்றிக் கழக அரசு இந்த விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

கடந்த ஆட்சியும் தற்போதைய ஆட்சியும் மாறக்கூடும்; ஆனால் இந்தத் தீர்ப்பு முருகப்பெருமானுக்குக் கிடைத்த வெற்றி என்று தெரிவித்த நயினார் நாகேந்திரன், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் அரசியல் செய்வதாகவும் விமர்சித்தார்.

சர்வே கல்லா, தீபத்தூணா என்பதை இறுதி செய்யாமல் இடைக்காலமாக தீபம் ஏற்ற அனுமதியா? – உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!

MUST READ