Homeசெய்திகள்தமிழ்நாடுஜூலை மாதத்தில் Guidance தமிழ்நாடு நிறுவனத்தில் பெருமளவில் ஊழியர்கள் ராஜினாமா செய்யவில்லை – நிறுவனம் விளக்கம்!

ஜூலை மாதத்தில் Guidance தமிழ்நாடு நிறுவனத்தில் பெருமளவில் ஊழியர்கள் ராஜினாமா செய்யவில்லை – நிறுவனம் விளக்கம்!

-

- Advertisement -

ஜூலை 2026-ல் Guidance தமிழ்நாடு நிறுவனத்தில் இருந்து பெருமளவில் ஊழியர்கள் ராஜினாமா செய்ததாகக் கூறப்படும் தகவல்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.ஜூலை மாதத்தில் Guidance தமிழ்நாடு நிறுவனத்தில் பெருமளவில் ஊழியர்கள் ராஜினாமா செய்யவில்லை – நிறுவனம் விளக்கம்!

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், ஒரு நிறுவனத்தில் ஊழியர்கள் பணியிலிருந்து விலகுவது இயல்பான நிகழ்வுதான் என்றும், Guidance தமிழ்நாடு நிறுவனத்திலும் பல்வேறு காரணங்களால் ஊழியர்கள் பணியிலிருந்து விலகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த வேலைவாய்ப்புகளைத் தேர்வு செய்தல், உயர்கல்வி, பணியிட மாற்றம், தனிப்பட்ட மற்றும் குடும்பச் சூழல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஊழியர்கள் பணியிலிருந்து விலகுவதாகக் கூறப்பட்டுள்ளது.

வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைத் தேர்வு செய்ய விரும்பும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரின் தொழில்முறை லட்சியங்களையும் Guidance தமிழ்நாடு நிறுவனம் மதித்து வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதலீடுகளை ஈர்ப்பதிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு, அண்டை மாநிலங்களுடன் எப்போதும் ஆரோக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான போட்டியை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய போட்டி இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பமான முதலீட்டு மையமாகத் தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்து வருவதாகவும் Guidance தமிழ்நாடு நிறுவனம் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.

‘கையை விட்டுப் போகும் முதலீடுகள்; Guidance TN முகமையில் நடப்பது என்ன?’ – அன்புமணி சரமாரி கேள்வி!

MUST READ