Homeசெய்திகள்தமிழ்நாடு‘கையை விட்டுப் போகும் முதலீடுகள்; Guidance TN முகமையில் நடப்பது என்ன?’ - அன்புமணி சரமாரி...

‘கையை விட்டுப் போகும் முதலீடுகள்; Guidance TN முகமையில் நடப்பது என்ன?’ – அன்புமணி சரமாரி கேள்வி!

-

- Advertisement -

அன்புமணி ராமதாஸ்(file)
தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முக்கிய அமைப்பான ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ (Guidance TN) முகமையிலிருந்து 15 பணியாளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் மற்றும் முதலீட்டாளர்கள் குறித்த ரகசியத் தகவல்கள் கசிந்ததாக எழுந்துள்ள புகார்கள் குறித்துத் தமிழக அரசு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய அம்சங்கள்:

தகவல் கசிவு புகாரும், பணிநீக்கச் சர்ச்சையும்:

  • தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ‘Guidance TN’ முகமையில் பணியாற்றி வந்த 15 பேர், தமிழகத்தில் முதலீடு செய்வதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிறுவனங்கள் குறித்த ரகசிய விவரங்களை ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்குச் சட்டவிரோதமாகக் கசியவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

  • இதனைக் கண்டறிந்ததால் அந்த 15 ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர்களில் மூவர் ஆந்திர அரசின் தொழில்துறைக்கு முதலீடுகளை ஈர்த்துத் தரும் பணியில் சேர்ந்துள்ளதாகவும் வெளியான தகவல்கள் இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன.

ஊழியர்களின் மாறுபட்ட விளக்கம்:

  • மறுபுறம், பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பணியாளர்களோ இதற்கு நேர்மாறான கருத்தை முன்வைத்துள்ளனர். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தமிழகத்தில் பணியாற்றுவதற்கான உகந்த சூழல் இல்லை என்றும், புதிய அரசு பதவியேற்ற ஒரு மாதத்திலேயே தாங்கள் பதவி விலகிவிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
    மக்கள் பணியே இலட்சியம்! மறுபடியும் கழக ஆட்சி நிச்சயம்!

  • மேலும், Guidance TN அமைப்பின் பணிச்சூழல் மோசமடைந்துள்ளது குறித்துத் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றில் எது உண்மை என்பதை அறிந்து கொள்ளும் உரிமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு.

அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் முதலீடுகள்:

  • அண்மைக்காலங்களில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 3 தென் கொரிய நிறுவனங்களின் ரூ.1,614 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுள்ளன.

  • அதேபோல, தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் என்ஃபீல்டு (Enfield), ஹையர் எலக்ட்ரானிக்ஸ் (Haier Electronics) போன்ற நிறுவனங்களும் போட்டி மாநிலமான ஆந்திராவில் முதலீடு செய்யத் தீர்மானித்துள்ளன. இத்தகைய சூழலில், ரகசியத் தகவல்கள் கசிந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

அரசு மௌனம் காப்பது ஏன்? தமிழகத்தின் முதலீடு ஈர்ப்புக் கட்டமைப்பையே நிலைகுலையச் செய்யும் இந்த விவகாரத்தில், யூகச் செய்திகள் மட்டுமே வெளிவரும் நிலையில் அரசு அமைதி காப்பது கவலையளிக்கிறது. முதலீட்டாளர்களின் தகவல்கள் கசியவிடப்பட்டிருந்தால், அது துரோகமாகக் கருதப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதையும், ஆந்திர அரசுப் பணியில் சேருவதையும் தமிழக அரசு வேடிக்கை பார்த்தது ஏன்?

ஒருவேளை மோசமான பணிச்சூழல் காரணமாக அவர்கள் பதவி விலகியிருந்தால், அதுவும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடியதே. மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பைத் தீர்மானிப்பதில் தொழில் முதலீடுகளுக்கு முக்கியப் பங்கு உள்ளதால், இந்தச் சர்ச்சை குறித்துத் தமிழக அரசு தாமதமின்றி உரிய விளக்கமளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

MUST READ