- Advertisement -
திமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறைப் பணிகள் அனைத்தும் டெண்டர் விதிகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “திமுக ஆட்சியில் அனைத்து நெடுஞ்சாலைப் பணிகளும் டெண்டர் விதிகளுக்கு உட்பட்டே நடைபெற்றன. ரூ.10 லட்சத்திற்குக் கீழ் மதிப்புள்ள பணிகளுக்கும் கோட்டப் பொறியாளர் அளவில் டெண்டர் கோரப்பட்டது.
டெண்டர் கோரப்படாமல் எந்தச் சாலைப் பணிகளும் நடைபெறவில்லை. இதற்கான டெண்டர் பதிவேடுகளை ஆய்வு செய்தாலே உண்மை தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைத் துறைப் பணிகளில் டெண்டர் நடைமுறைகள் குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் எ.வ.வேலு இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
