Homeசெய்திகள்தமிழ்நாடுதவெக ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்கள்: சவுக்கு சங்கர் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்.!

தவெக ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்கள்: சவுக்கு சங்கர் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்.!

-

- Advertisement -

சவுக்கு சங்கர்

தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியில் ஆறு மாத காலத்தில் ஆறு காவல் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் சூழலில், மதுரை லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழப்பு விவகாரத்தின் பின்னணி குறித்துச் சவுக்கு சங்கர் தனது காணொளியில் விரிவான தகவல்களை முன்வைத்துள்ளார்.

தேவாரத்திலிருந்து ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அவனியாபுரம் குடோன் நோக்கிச் சென்ற லாரி, வாளாந்தூர் கால்வாய் அருகே தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது,,. இது குறித்து ஓட்டுநர் பாலகிருஷ்ணன் வாளாந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றதாகவும், பின்னர் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானதாகவும் சவுக்கு சங்கர் விவரித்துள்ளார்.

அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல் துறை தரப்பில் கூறப்பட்டாலும், காவல் துறையினரே அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

லாரியில் இருந்த ஏலக்காய் மூட்டைகளின் கணக்கு, இன்சூரன்ஸ் விவகாரம் மற்றும் தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக இருவேறு தகவல்கள் நிலவுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், உரிய முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் சம்மன் இல்லாமல் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை லாரி ஓட்டுநர் மரணம்

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன், காவல் நிலையத்திற்குள் பதிவான சிசிடிவி காட்சிகள் எவ்வாறு ஊடகங்களுக்குச் சென்றன எனக் கேள்வி எழுப்பியதோடு, பாலகிருஷ்ணன் சென்ற அனைத்துக் காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகளையும் நகலெடுத்து நீதிமன்றப் பதிவாளரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதாகச் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 2025-ல் காவல் சித்திரவதைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி “சாரி வேண்டாம், நீதி வேண்டும்” என வலியுறுத்திய விஜய், ஆட்சிக்கு வந்த பிறகு காவல் துறையின் செயல்பாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், மதுரை நகைக் கொள்ளை வழக்கு தொடர்பாக வெளியான ஏஐ (AI) காணொளி மற்றும் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களையும் முன்வைத்து, நிர்வாகம் மற்றும் காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து அவர் கேள்விகள் எழுப்பியுள்ளார்.

மகளைப் பற்றி அவதூறு: நடிகர் அர்ஜுன் காட்டமான அறிக்கை – சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

MUST READ