முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சோதனைகள் மக்கள் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் நடத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தியைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்கள் தமிழ்நாட்டில் பிடிக்கப்படுகின்றன. இனியும் ‘தி.மு.க., தி.மு.க.’ என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்காது.
தவெக ஆட்சியின் சீர்கேடும், குற்றச்செயல்களும் சந்தி சிரிக்கின்றன. திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், அதனைத் திசைதிருப்பும் நடவடிக்கை என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பினாமி பெயர்களில் குவாரிகள் செயல்பட்டதாகப் புகார் – மூர்த்தி வீட்டில் சோதனை நடத்தியது ஏன்?
