Homeசெய்திகள்தமிழ்நாடுஆக்கிரமிப்பில் இருந்த ரூ.30.18 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு – இந்து சமய அறநிலையத்துறை...

ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.30.18 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு – இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!

-

- Advertisement -

தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த கோயில்களுக்குச் சொந்தமான ரூ.30.18 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.30.18 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு – இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!

இதன்படி, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.21.88 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல், மேற்கு மாம்பலத்தில் உள்ள பாஷ்யகார கேசவ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ.8.30 கோடி மதிப்பிலான சொத்துகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு கோயில்களுக்கும் சொந்தமான சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.30.18 கோடி ஆகும். ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

தலைநகரம் கொலை நகரமாக மாறிவிட்டது – தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்!

MUST READ