Homeசெய்திகள்தமிழ்நாடுமாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றே குவாரியை லீசுக்கு எடுத்தோம் – மூர்த்தி விளக்கம்; நீதிமன்றத்தை நாடுவோம்...

மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றே குவாரியை லீசுக்கு எடுத்தோம் – மூர்த்தி விளக்கம்; நீதிமன்றத்தை நாடுவோம் என அறிவிப்பு!

-

- Advertisement -

மதுரையில் திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்திக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது.மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றே குவாரியை லீசுக்கு எடுத்தோம் – மூர்த்தி விளக்கம்; நீதிமன்றத்தை நாடுவோம் என அறிவிப்பு!

மூர்த்திக்குச் சொந்தமான இரண்டு வீடுகள், அவரது மைத்துனர் வீடு மற்றும் உறவினர்களின் வீடுகள் எனப் பல்வேறு இடங்களில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் மூர்த்தி, “2019-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றுத்தான் குவாரியை லீசுக்கு எடுத்தோம். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகி சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்று தெரிவித்தார்.

குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்ற நிலையில், குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மூர்த்தியை குறிவைத்து ரெய்டு நடத்தி திசைதிருப்ப முயற்சி – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

MUST READ