Homeசெய்திகள்தமிழ்நாடுபொள்ளாச்சி: அறிவியல் கண்காட்சியில் விக்ரம் லேண்டரின் மாதிரி வடிவம் செய்து அசத்திய மாணவர்கள்..

பொள்ளாச்சி: அறிவியல் கண்காட்சியில் விக்ரம் லேண்டரின் மாதிரி வடிவம் செய்து அசத்திய மாணவர்கள்..

-

- Advertisement -

பொள்ளாச்சி ஜோதி நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில், இன்று (நவம்பர் 21, 2026) ‘KREA – 2026’ என்ற தலைப்பில் பிரம்மாண்டமான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில், ஒவ்வொரு மாதமும் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு அறிவியல் கண்காட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகள் மட்டுமே இடம்பெற்றன.

இந்தக் கண்காட்சியின் முக்கிய அம்சமாக, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் மைல்கல்லாக அமைந்த சந்திரயான்-3 திட்டத்தின் ‘பிரக்யான் ரோவர்’ (Pragyan Rover) மற்றும் ‘விக்ரம் லேண்டர்’ (Vikram Lander) ஆகியவற்றின் தத்ரூபமான மாதிரி வடிவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை உருவாக்கிய மாணவர்களும், அதைப் பார்வையிட்ட சக மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Pollachi school

மேலும், சந்திரயான் திட்டம் குறித்த விரிவான தகவல்களும், இந்தியாவின் விண்வெளி சாதனைகள் குறித்த விவரங்களும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், இந்த கண்காட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மின்சாரம், வளிமண்டலம், மனித உறுப்புகளின் செயல்பாடுகள், இயற்பியல் மற்றும் வேதியியல் செயல்பாடுகள், கணித அறிவியல், இயற்கை வழி பொருட்கள் மற்றும் ரப்பர் பேண்ட் மூலம் இசைக்கப்பட்ட கிட்டார் போன்ற பல்வேறு தலைப்புகளில் அறிவியல் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

பெற்றோர்களும், மாணவர்களும் இந்த அறிவியல் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டு, மாணவர்களின் படைப்புகளைப் பாராட்டினர்.

https://www.apcnewstamil.com/news/crime-news/ranipet-daughter-accused-of-murdering-mother-for-gold-jewellery/251058

MUST READ