Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் – 9.16 லட்சம் குழந்தைகளுக்கு...

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் – 9.16 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு!

-

- Advertisement -

தமிழகத்தில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை (நவம்பர் 22) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் – 9.16 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு!

இதற்காக நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்கள் செயல்பட உள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் 6,647 மையங்கள் மூலம் 9.16 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

‘தகவல் கசிவு, பணிநீக்கம் என்பது வெறும் வதந்தி; ஊழியர்கள் விலகுவது சாதாரண நிகழ்வுதான்!’ – ‘Guidance TN’ புது விளக்கம்..

MUST READ