Homeசெய்திகள்தமிழ்நாடுதவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடு – 1.32 லட்சம் பேருக்கு...

தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடு – 1.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!

-

- Advertisement -

தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டும் வகையில், தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 6 மாதங்களில் ரூ.1,14,811.91 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தொழில்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் 1,32,771 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடு – 1.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!

கடந்த 6 மாதங்களில் மட்டும் 23 துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் மொத்தம் 112 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் மூலம் உலகளாவிய முதலீட்டாளர்களின் விருப்பத் தேர்வாகத் தமிழ்நாடு உருவாகியுள்ளதாகத் தொழில்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீடுகளைப் பொறுத்தவரை, வாகன உற்பத்தித் துறையில் ரூ.17,073 கோடியும், மின்னணுவியல் துறையில் ரூ.16,832 கோடியும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஜவுளித் துறையில் மட்டும் ரூ.7,871 கோடி மதிப்பிலான முதலீடுகள் வந்துள்ளன.

மேலும், உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres) மூலம் மட்டும் 5,870 பேருக்கு உயர்தர வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளன. ஒப்பந்தம் செய்யப்பட்ட 112 திட்டங்களில் 83 திட்டங்கள் நிலம் உறுதி செய்யப்பட்ட நிலை அல்லது அதற்கு மேற்பட்ட முன்னேற்றத்தை எட்டியுள்ளன.

தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாதங்களிலேயே பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னேற்றம் கண்டுள்ளதாகத் தொழில்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Guidance TN விளக்கத்தில் முரண்பாடு : தகவல் கசிவு வதந்தியை திட்டமிட்டு பரப்பியுள்ள தவெக – டி.ஆர்.பி.ராஜா காட்டம்!

MUST READ