- Advertisement -
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், மதவெறியர்களின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமல், உண்மையான பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே தீபம் ஏற்றுவதற்கு தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மறு சீராய்வு மனு வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ததாகத் தகவல்!
