தனது அண்ணனைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அமைச்சர் மரிய வில்சன் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் (J.M. 1 Court) இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மரிய வில்சன் தரப்பில் அவரது வழக்கறிஞர் அஜித்குமார் ஆஜரானார். இந்த வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து அமைச்சர் மரிய வில்சனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்து பிறப்பித்த உத்தரவின் நகலை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகலை ஏற்றுக்கொண்ட புதுச்சேரி நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். தமிழக அமைச்சர் மரிய வில்சன், தனது சொந்த அண்ணனைத் தாக்கியதாகப் புதுச்சேரியில் தொடரப்பட்ட வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
162 கட்டணமில்லா மகளிர் பேருந்துகள் முடக்கம்? போக்குவரத்து கழகத்தின் கணக்கில் குளறுபடி எனப் புகார்!
