தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியை இணைப்பது தமிழ்நாட்டின் உயர்கல்வி தன்னாட்சி அதிகாரத்தைப் பறிக்கும் ஆபத்தான நகர்வு என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் கவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களின் தேடுதல் குழுவில், ஆளுநரின் விருப்பப்படி யுஜிசி பிரதிநிதியை இணைப்பது தமிழ்நாட்டின் உயர்கல்வி தன்னாட்சி அதிகாரத்தை முற்றிலுமாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் ஓர் ஆபத்தான நகர்வாகும். ஆளுநர் தரப்பில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கும், யுஜிசி பிரதிநிதியை இந்தத் தேடல் குழுவிற்குள் நுழைப்பதற்கான ஒன்றிய அரசின் மறைமுகத் தந்திரங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணிந்து போகிறதோ என்ற பலத்த சந்தேகம் தற்போது மக்களிடையே எழுந்துள்ளது.” பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்திலும், உயர்கல்வித் துறையிலும் மாநில அரசுக்கு இருக்கும் உரிமைகளைப் பாதுகாப்பது மிக அவசியமாகும். எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எவ்வித அழுத்தங்களுக்கும் பணியாமல், தமிழ்நாட்டின் கல்வி மற்றும் மாநில சுயாட்சி உரிமைகளை உறுதியுடன் காக்க வேண்டும் என்று முகம்மது முபாரக் தனது அறிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

