இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் 7 மாடி அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் புயலால் ஏற்பட்ட துயரம் மறைவதற்குள் மற்றொரு அசம்பாவிதம் நடந்துள்ளது. இந்தோனேசியா நாட்டில் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள 7 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதல் மாடியில் பற்றிய தீ, அடுத்தடுத்த மாடிகளுக்கு பரவியதால் அப்பாவி உயிர்கள் பறிபோயுளள்ன. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமணைக்கு கொண்டு சென்றுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஜகார்த்தா மக்கள் இடையே இந்தச் சம்பவம் பெரும் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி – பரப்புரை நாளை தொடக்கம்



